தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் அதிரடி மாற்றம்! -வி.பி.துரைசாமி, வானதி துணைத் தலைவராக நியமனம்

 

தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் அதிரடி மாற்றம்! -வி.பி.துரைசாமி, வானதி துணைத் தலைவராக நியமனம்

தமிழக பா.ஜ.க-வுக்கு நிர்வாகிகளை நியமித்து மாநிலத் தலைவர் முருகன் அறிவித்துள்ளார். தி.மு.க-வில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்த வி.பி.துரைசாமிக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் அதிரடி மாற்றம்! -வி.பி.துரைசாமி, வானதி துணைத் தலைவராக நியமனம்தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து நீண்ட காத்திருப்பு, போட்டிக்குப் பிறகு யாரும் எதிர்பாராத முருகன் தமிழக பா.ஜ.க தலைவர் ஆனார். அவர் நியமிக்கப்பட்டு மூன்று மாதங்கள் முடிந்த நிலையில், கட்சி நிர்வாகிகளை அறிவித்துள்ளார். பல முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் மாற்றப்படவில்லை. சில மாறுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் அதிரடி மாற்றம்! -வி.பி.துரைசாமி, வானதி துணைத் தலைவராக நியமனம்மாநிலத் துணைத் தலைவராக தி.மு.க-வில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்த வி.பி.துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பொதுச் செயலாளராக இருந்த வானதி ஶ்ரீனிவாசனும் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களைத் தவிர, நைனார் நாகேந்திரன், சக்ரவர்த்தி, நரேந்திரன், முருகானந்தம், எம்.என்.ராஜா, மகாலஷ்மி, கனக சபாபதி, புரட்சிக்கவிதாசன் ஆகியோரும் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் அதிரடி மாற்றம்! -வி.பி.துரைசாமி, வானதி துணைத் தலைவராக நியமனம்கே.டி.ராகவன், செல்வகுமார், சீனிவாசன், கரு நாகராஜன் ஆகியோர் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில பொருளாளராக எஸ்.ஆர்.சேகர் தொடர்கிறார்.
செயலாளர்களாக சண்முக ராஜ், டால்பின் ஶ்ரீதர், வரதராஜன், பாஸ்கர், உமாரதி, மலர் கொடி, கார்த்தியாயினி, பார்வதி நடராஜன், சுமதி வெங்கடேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இணைப் பொருளாளராக சிவ சுப்பிரமணியனும், மாநில அலுவலக செயலாளராக சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.