அமமுக நிர்வாகி அளித்த சிகிச்சையில் பாஜக நிர்வாகி உயிரிழப்பு! ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர்

 

அமமுக நிர்வாகி அளித்த சிகிச்சையில் பாஜக நிர்வாகி உயிரிழப்பு! ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர்

தேனியில் பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர் இறப்புக்கு காரணமான மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமமுக நிர்வாகி அளித்த சிகிச்சையில் பாஜக நிர்வாகி உயிரிழப்பு! ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர்

தேனி மாவட்ட பாஜக முன்னாள் மாவட்ட செயலாளரான ராஜேஸ்கண்ணா‌ தேவாரம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அமமுக மாநில அமைப்புச் செயலாளரும் மருத்துவருமான கதிர்காமுவிற்கு சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே ராஜேஸ்கண்ணா கடந்த மே 30 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது இறப்புக்கு அமமுக நிர்வாகியின் தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையே காரணம் என கூறியும், மருத்துவரும் அமமுக பிரமுகருமான கதிர்காமு மற்றும் மருத்துவமனையிலுள்ள இதர மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த ராஜேஸ்கண்ணாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் பாரதிய ஜனதா கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்களை எழுப்பினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி தங்களது கோரிக்கை மனுவையும் பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி சென்றனர்.