முரண்டு பிடிக்கும் பாஜக – தேமுதிக : ஓபிஎஸ் – ஈபிஎஸ் அவரச ஆலோசனை

 

முரண்டு பிடிக்கும் பாஜக – தேமுதிக : ஓபிஎஸ் – ஈபிஎஸ் அவரச ஆலோசனை

சென்னை அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் அவரச ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக தேர்தல் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. குறிப்பாக கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டில் பாமகவுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட நிலையில் தொகுதி பங்கீட்டில் சீட்டுகளை குறைத்து வாங்கிக் கொண்டதாக பாமக தரப்பு தெரிவித்துள்ளது.

முரண்டு பிடிக்கும் பாஜக – தேமுதிக : ஓபிஎஸ் – ஈபிஎஸ் அவரச ஆலோசனை

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக நிர்வாகிகள் ,முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் ஆலோசனை நடத்தினர். இதன் முடிவுகள் பாஜகவுக்கு 22 முதல் 25 சீட்டுகள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் பாஜக கூடுதலாக சீட்டு கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் மக்களவை தேர்தலில் இருந்து அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக இந்த தேர்தலில் 40 சீட்டுகளுக்கு மேலாக கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத பட்சத்தில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .

முரண்டு பிடிக்கும் பாஜக – தேமுதிக : ஓபிஎஸ் – ஈபிஎஸ் அவரச ஆலோசனை

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருவரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக , தேமுதிக உடன் இழுபறி இருக்கும் நிலையில் இருவரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.