அமைச்சர்களுக்கு நாங்கள் கட்டளையிடவில்லை, அவர்கள் தலைமைதான் கட்டளையிட்டுள்ளது! – பா.ஜ.க பதிலடி

அமைச்சர்களுக்கு நாங்கள் கட்டளையிடவில்லை, அவர்கள் தலைமைதான் கட்டளையிட்டுள்ளது! – பா.ஜ.க பதிலடி

கூட்டணி தொடர்பாக பேசக் கூடாது என்று எங்களுக்கு பா.ஜ.க-வினர் உத்தரவு போட முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்த நிலையில், நாங்கள் உத்தரவு போடவில்லை, உங்கள் தலைமைதான் உத்தரவு போட்டுள்ளது என்று பா.ஜ.க பதிலடி கொடுத்துள்ளது.

அமைச்சர்களுக்கு நாங்கள் கட்டளையிடவில்லை, அவர்கள் தலைமைதான் கட்டளையிட்டுள்ளது! – பா.ஜ.க பதிலடி

அமைச்சர் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ போன்றவர்கள் கூட்டணி பற்றி பேசக் கூடாது என்ற வகையில் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருந்தார். இதற்கு அ.தி.மு.க-வுக்குள் கொந்தளிப்பு ஏற்பட்டது. இன்று அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் அது பற்றி கேட்டனர். அதற்கு அவர், “கூட்டணி குறித்து அமைச்சர்கள் பேசக்கூடாது என்று பா.ஜ.க தலைவர்கள் எங்களுக்கு கட்டளையிட முடியாது. கூட்டணி தர்மத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். நாங்களும் கடைபிடிப்போம்” என்றார்.

அமைச்சர்களுக்கு நாங்கள் கட்டளையிடவில்லை, அவர்கள் தலைமைதான் கட்டளையிட்டுள்ளது! – பா.ஜ.க பதிலடி

இதற்கு பா.ஜ.க தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை பா.ஜ.க அலுவலகத்தில் இன்று வ.உ.சிதம்பரனார் படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், துணைத் தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, அமைச்சர் ஜெயக்குமார் கருத்து குறித்து கரு.நாகராஜனிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், “கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது என்று அமைச்சர்களுக்கு பா.ஜ.க-வினர் உத்தரவிடவில்லை. கூட்டணி தொடர்பாக பேசக் கூடாது என் அ.தி.மு.க தலைமைதான் அமைச்சர்களுக்கு கட்டளையிட்டுள்ளது.

அமைச்சர்களுக்கு நாங்கள் கட்டளையிடவில்லை, அவர்கள் தலைமைதான் கட்டளையிட்டுள்ளது! – பா.ஜ.க பதிலடி

கூட்டணி தொடர்பாக இருகட்சித் தலைவர்கள் மட்டும் பேசிக்கொள்வதே சரியாக இருக்கும். அமைச்சர்கள், மற்றவர்களின் கருத்தை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை” என்றார்.

அமைச்சர்களுக்கு நாங்கள் கட்டளையிடவில்லை, அவர்கள் தலைமைதான் கட்டளையிட்டுள்ளது! – பா.ஜ.க பதிலடி

நடிகர் ரஜினிகாந்த் துரைமுருகன், டி.ஆர்.பாலுவுக்கு வாழ்த்து தெரிவித்தது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், “ரஜினிகாந்த் தனி மனிதர். அவர் யாரை வேண்டுமானாலும் மாற்றலாம். நாளைக்கு அரசியலுக்கு வந்த பிறகு வாழ்த்தினாலும் தவறில்லை” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட நயினார் நாகேந்திரன் விருப்பம் தெரிவித்துள்ளார். வேட்பாளர் யார் என்பதை கட்சி தலைமைதான் முடிவு செய்யும்” என்றார்.