இந்து கோயிலை இடிப்பது தெய்வ குற்றம்.. முதல்வர் சந்திரசேகர் ராவ் மன்னிப்பு கேட்க வேண்டும் – பா.ஜ.க. வலியுறுத்தல்

இந்து கோயிலை இடிப்பது தெய்வ குற்றம்.. முதல்வர் சந்திரசேகர் ராவ் மன்னிப்பு கேட்க வேண்டும் – பா.ஜ.க. வலியுறுத்தல்

புதிய தலைமை செயலகம்
தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலா தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் தலைநகராக விளங்கும் ஹைதராபாத்தில் உள்ள பழைய தலைமை செயலகத்தை இடித்து விட்டு ரூ.400 கோடியில் புதிய தலைமை செயலகத்தை கட்ட முதல்வர் சந்திரசேகர் ராவ் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அடிக்கல் நாட்டினார். இருப்பினும், இடையில் ஏற்பட்ட தடைகளால் பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்து கோயிலை இடிப்பது தெய்வ குற்றம்.. முதல்வர் சந்திரசேகர் ராவ் மன்னிப்பு கேட்க வேண்டும் – பா.ஜ.க. வலியுறுத்தல்
தெலங்கானாவின் பழைய தலைமை செயலக கட்டிட இடிப்பு பணி தொடங்கியது

கோயில் இடிப்பு
இந்நிலையில், உயர் நீதிமன்றம் கடந்த 6ம் தேதியன்று புதிய தலைமை செயலகத்தை கட்டிட பணிகளை தொடங்க அனுமதி கொடுத்தது. அதற்கு அடுத்தநாள் தெலங்கானா அரசு பழைய தலைமை செயலக கட்டிடங்களை இடிக்கும் பணிகளை தொடங்கியது. அப்போது அந்த வளாகத்தில் இருந்த இந்து கோயிலும் இடிக்கப்பட்டது. இந்து கோயில் இடிக்கப்பட்டதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெலங்கானா பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் தலைவர் கே.கிருஷ்ணா சாகர் ராவ் கூறியதாவது: கோயிலை அழிப்பது ஒரு தெய்வ நிந்தனை. கே.சி.ஆர். அரசு தன்னிச்சையாக இந்து மத வழிபாட்டு தலத்தை இடிக்கும் அவமதிக்கும் மற்றும் மோசமான செயலை மேற்கொண்டுள்ளது.

இந்து கோயிலை இடிப்பது தெய்வ குற்றம்.. முதல்வர் சந்திரசேகர் ராவ் மன்னிப்பு கேட்க வேண்டும் – பா.ஜ.க. வலியுறுத்தல்
கே.கிருஷ்ணா சாகர் ராவ்

இந்துக்களின் உணர்வு
அந்த கோயிலின் புனிததன்மை அல்லது அங்கு பிரார்த்தனை செய்பவர்களின் உணர்வு அல்லது மாநில இந்துக்களின் உணர்வுகளை மாநில அரசு பரிசீலனை செய்து இருக்க வேண்டும். இந்துக்களின் புனிதமான உணர்வுகளுக்கு அவமானமாக இந்த வெட்கக்கேடான மற்றும் சிந்தனையற்ற இடிப்பை பா.ஜ.க. கருதுகிறது. முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இடிப்ப பகுதிக்கு சென்று பார்வையிட வேண்டும், அரசின் நடவடிக்கைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.