நயினார் செஞ்சது தப்பில்லை.. கூலாக சொன்ன பாஜக மேலிட பொறுப்பாளர்!

 

நயினார் செஞ்சது தப்பில்லை.. கூலாக சொன்ன பாஜக மேலிட பொறுப்பாளர்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக தனது 177 வேட்பாளர்களின் பட்டியலையும் வெளியிட்ட நிலையில், பாஜக இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. வேட்பாளர்களை தேர்வு செய்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அதற்கு ஒப்புதல் பெறுவதற்காக டெல்லிக்கு சென்றிருக்கிறார். இன்று மாலை வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நயினார் செஞ்சது தப்பில்லை.. கூலாக சொன்ன பாஜக மேலிட பொறுப்பாளர்!

பாஜகவில் இன்னும் வேட்பாளர் பட்டியலே அறிவிக்கப்படாத சூழலில், தமிழக பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நல்ல நேரத்தை மனதில் வைத்துக் கொண்டு தான் வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பே வேட்பு மனு தாக்கல் செய்ததாக அவர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

நயினார் செஞ்சது தப்பில்லை.. கூலாக சொன்ன பாஜக மேலிட பொறுப்பாளர்!

நயினாரின் இந்த செயல் பாஜக தலைமையை முகம் சுளிக்க வைத்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் செய்தது தவறில்லை என தமிழக பாஜக மேலிடப் [பொறுப்பாளர் சி.டி.ரவி கூலாக தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தலைமை வேட்பாளர் பட்டியலை அறிவித்த பின்பே நயினார் நாகேந்திரன் வேட்பாளராக கருதப்படுவார் என அவர் கூறியுள்ளார்.