உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி – பாஜக அண்ணாமலை அறிவிப்பு!

 

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி – பாஜக அண்ணாமலை அறிவிப்பு!

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்போம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் வரும் செப்.15ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி, செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தேர்தல் நடத்தப்படவுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் தயாராகி வரும் அதே வேளையில், அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. திமுக இரண்டு முறை கூட்டங்களை கூட்டி ஆலோசனை நடத்தி விட்டது. அதிமுகவும் மாவட்ட ஆட்சியர்களுடன் இரண்டு நாட்களாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி – பாஜக அண்ணாமலை அறிவிப்பு!

இந்த நிலையில், நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் தான் சேர்ந்து பயணிப்போம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணியில் தான் தேர்தலை சந்திப்போம். காங்கிரஸ் கட்சியினர் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு பாஜக காரணம் இல்லை, இதை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது என்று கூறினார்.

மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தலையிட மாட்டோம், விசாரணை நேர்மையாக இருக்க வேண்டும். எல் முருகன் எந்த மாநிலத்தில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்படுவார் என்பதை பாஜக தலைமை அறிவிக்கும் என்றும் தெரிவித்தார்.