ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளக்கூடாது என்ற அசாதுதீன் ஓவைசிக்கு பா.ஜ.க. கண்டனம்

 

ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளக்கூடாது என்ற அசாதுதீன் ஓவைசிக்கு பா.ஜ.க. கண்டனம்

ஆகஸ்ட் 5ம் தேதியன்று அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளக்கூடாது என எ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்து இருந்தார். அதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெலங்கானா பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் என்.வி. சுபாஷ் கூறியதாவது: ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற உள்ள அயோத்தியின் ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளக்கூடாது என்ற அசாதுதீன் ஓவைசி கருத்துக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவிக்கிறது. அரசியலமைப்பு பதவிகளில் உள்ளவர்களுக்கு அவர்களது நம்பிக்கையையும் நம்பிக்கைகளையும் பின்பற்ற உரிமையும் உண்டு. அந்த விழாவில் பிரதமர் கலந்து கொள்வதை அரசியலமைப்பில் உள்ள எந்த விதிமுறையும் தடுக்காது. அந்த விழாவில் கலந்து கொள்வதா, வேண்டாமா என்பது பிரதமரின் தனிப்பட்டவிருப்பம், ஓவைசி உத்தரவுகளை பிறப்பிக்கக்கூடாது.

ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளக்கூடாது என்ற அசாதுதீன் ஓவைசிக்கு பா.ஜ.க. கண்டனம்

மதசார்பின்மை என்ற போர்வையில் சில அரசியல் கட்சிகள் அனைத்து தவறான செயல்களையும் செய்து வருகின்றன, மக்களின் அனைத்து பிரிவுகளில் வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றன. மதசார்பின்மை அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும்போது, பிரதமர்களும் அரசியலமைப்பு பதவிகளில் உள்ளவர்களும் கோயில்கள் மற்றும் மசூதிகளுக்கு விஜயம் செய்தனர். 2004-11க்கு இடையில் மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, பலர் மத நிகழ்ச்சிக்கு சென்றனர், ஓவைசியிடமிருந்து எந்த அறிக்கையும் வரவில்லை. நாட்டில் மதச்சார்பின்மை குறித்து அசாதுதீன் ஓவைசி அக்கறை கொண்டிருந்தால், ஹஜ் யாத்ரீகர்களுக்கு வழங்கப்படும் மானியம், பல்வேறு மாநில அரசுகள் நடத்தும் இப்தார் விருந்துகளுக்கு வரி செலுத்துவோரின் பணத்தை செலவிடுவது மற்றும் தெலங்கானா அரசு 12 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது பற்றி பேச வேண்டும். இடஒதுக்கீடு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது அது அமல்படுத்தவில்லை. தனது அரசியல் பிழைப்புக்காக ஓவைசி அத்தகைய அறிக்கைகளை கொடுக்கக்கூடாது. இந்துக்களின் உணர்வுகளை அவர் புண்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளக்கூடாது என்ற அசாதுதீன் ஓவைசிக்கு பா.ஜ.க. கண்டனம்

அசாதுதீன் ஓவைசி நேற்று முன்தினம் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், அயோத்தி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளக்கூடாது என அவுட்லுக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தேன். ஏனென்றால் அவர் பிரதமராக அந்த விழாவில் கலந்து கொண்டால், ஒரு நம்பிக்கையுள்ள மக்களுக்கு மட்டுமே பிரதமர் ஆதரவளிப்பார் என்ற செய்தி நாட்டில் செல்லும். தனிப்பட்ட முறையில் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளபோவதாக கூறினால் அதை யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். ஒவ்வொரு பிரதமரும் ஒரு மதத்தை பின்பற்றினால் அதை யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். ஒவ்வொரு பிரதமரும், அதை பின்பற்ற அவருக்கு உரிமை உண்டு. ஆனால் பிரதமரும் அரசியலமைப்பு தலைவராக இருக்கிறார், அரசியலமைப்பு மதச்சார்பின்மையின் அடிப்படை கட்டமைப்போடு தொடர்புடையது என தெரிவித்து இருந்தார்.