நடிகை ஓவியா மீது பாஜகவினர் புகார்!

 

நடிகை ஓவியா மீது பாஜகவினர் புகார்!

நடிகை ஓவியா மீது பாஜகவினர் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஓவியா மீது பாஜகவினர் புகார்!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று அரசு விழாவில்கலந்துகொள்ள சென்னை வந்தார். ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், சென்னை-வண்ணாரப்பேட்டை முதல், விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் , தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்டம் போன்றவற்றை தொடங்கி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்னர்.

முன்னதாக பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. நீட் தேர்வு, இந்தி திணிப்பு என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு #GoBackModi என்ற ஹேஷ்டாக் டிரெண்டானது.அந்த வகையில் தமிழகம் வந்த மோடிக்கு எதிராக நடிகை ஓவியாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் #Gobackmodi என பதிவிட்டிருந்தார். இது பேசும் பொருளானது.

நடிகை ஓவியா மீது பாஜகவினர் புகார்!

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக #GoBackModi என கருத்தை பதிவிட்ட நடிகை ஓவியா மீது பாஜக வினர் சிபிசிஐடி சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளனர்.பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும், இறையாண்மையை கடுக்கும் வகையிலும் செயல்பட்டதாக புகாரில் கூறி உள்ளனர்.