எதிர்க்கட்சி அந்தஸ்துக்காக தி.மு.க-வுடன் பா.ஜ.க போட்டி! – கடம்பூர் ராஜூ பேட்டி

 

எதிர்க்கட்சி அந்தஸ்துக்காக தி.மு.க-வுடன் பா.ஜ.க போட்டி! – கடம்பூர் ராஜூ பேட்டி

எதிர்க்கட்சி அந்தஸ்து யாருக்கு என்ற விஷயத்தில்தான் பா.ஜ.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் போட்டி என்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.

எதிர்க்கட்சி அந்தஸ்துக்காக தி.மு.க-வுடன் பா.ஜ.க போட்டி! – கடம்பூர் ராஜூ பேட்டி
தி.மு.க-வில் இருந்து சமீபத்தில் பா.ஜ.க சென்ற வி.பி.துரைசாமி சென்னையில் நேற்று பேட்டி அளித்தபோது, “தமிழ்நாட்டில் இனி தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையேதான் போட்டி” என்று கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. கூட்டணிக்குள் மோதலை ஏற்படுத்தும் வகையில் அவரது பேட்டி இருந்ததால் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அவர் சொல்வது பா.ஜ.க கருத்து இல்ல என்று பல அ.தி.மு.க அமைச்சர்கள் நிராகரித்தனர்.

எதிர்க்கட்சி அந்தஸ்துக்காக தி.மு.க-வுடன் பா.ஜ.க போட்டி! – கடம்பூர் ராஜூ பேட்டி
இந்த நிலையில் கயத்தாறில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் இது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “பா.ஜ.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் போட்டி என்றால் அது யார் ஆட்சிக்கு வருவது என்பதற்கான போட்டி இல்லை. இரண்டாவது இடத்தை யார் பிடிப்பது என்பதற்கான போட்டி. 2011ல் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்த தே.மு.திக எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. அந்த வகையில் எங்களுடன் இருக்கும் பா.ஜ.க-வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்க ஆசை வந்திருக்கும்.

எதிர்க்கட்சி அந்தஸ்துக்காக தி.மு.க-வுடன் பா.ஜ.க போட்டி! – கடம்பூர் ராஜூ பேட்டி
அதன் காரணமாகத்தான் அ.தி.மு.க தலைமையில் நாங்கள் தேர்தலை சந்தித்து எதிர்க்கட்சியாக வருவோம் என்று மறைமுகமாக வி.பி.துரைசாமி கூறியிருக்கிறார்.
தி.மு.க-வில் இருந்து தலைவர்கள் அதிக அளவில் வெளியேறுவார்கள் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார். அங்கு நடப்பது குடும்ப அரசியல். மைனாரிட்டி அரசு, குடும்ப அரசு ஒழிக்கப்பட வேண்டும் என்பதை சொல்லித்தான் 2011ல் ஜெயலலிதா பிரசாரம் செய்தார். இதனை ஏற்று மக்கள் எங்களுக்கு 202 இடங்களைக் கொடுத்தனர்.

 

தற்போதும் தி.மு.க-வில் குடும்ப அரசியல் உள்ளது. உதயநிதியை ஸ்டாலின் முன்னிலைப்படுத்துகிறார். இதை நாங்கள் சொன்னால் அரசியல் இருக்கும். ஆனால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அழகிரியே கூறுகிறார். தி.மு.க-வுக்குள் இருக்கும் மனக்குமுறல்கள் எங்களை விட அழகிரிக்கு நன்றாகவே தெரியும்” என்றார்.