சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் பின் தங்கிய பாஜக

 

சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் பின் தங்கிய பாஜக

சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களையும் பா.ஜ.க. அல்லாத மாநிலக் கட்சிகள் பிடித்திருக்கிறது.

சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் பின் தங்கிய பாஜக

மிகவும் பிரபலமான 10 முதல்வர்களில் ஏழு பேர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களாவர். மோசமாக செயல்படும் 10 முதல்வர்களில் ஏழு பேர் பாஜக மற்றும் அதன் கூட்டணியை சேர்ந்தவர்கள் என்பது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சி வோட்டர்ஸ் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அதன்படி பாஜக முதலமைச்சர்கள் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வையே சம்பாதித்துள்ளனர். காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்கள் சில சமயங்களில் அந்தந்த மாநிலங்களுக்குள் மோடியை விட சற்று பிரபலமாக உள்ளனர்.

சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் பின் தங்கிய பாஜக

மிகவும் சிறப்பாக செயல்படும் முதல்வர்கள் பட்டியலில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முதலிடத்தில் உள்ளார், தொடர்ந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் உள்ளனர். மோசமான முதல்வர்கள் பட்டியலில் உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் ஆகியோர் அந்தந்த மாநில மக்களாலேயே வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.