எங்க கட்சி பூத் தலைவரை உங்க கட்சிக்கு இழுத்து பாருங்க பார்ப்போம்.. திரிணாமுல் காங்கிரசுக்கு சவால் விடுத்த பா.ஜ.க.

எங்க கட்சி பூத் தலைவரை உங்க கட்சிக்கு இழுத்து பாருங்க பார்ப்போம்.. திரிணாமுல் காங்கிரசுக்கு சவால் விடுத்த பா.ஜ.க.

மேற்கு வங்கத்தில் எங்க கட்சி பூத் தலைவரை உங்க கட்சிக்கு இழுத்து பாருங்க பார்ப்போம் என்று திரிணாமுல் காங்கிரசுக்கு பா.ஜ.க. சவால் விடுத்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வும், திரிணாமுல் காங்கிரசும் பரம எதிரிகள் ஒன்றுக்கொன்று மோதி வருகின்றன. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் பா.ஜக. புதிய சக்தியாக உருவெடுத்து இருப்பது அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

எங்க கட்சி பூத் தலைவரை உங்க கட்சிக்கு இழுத்து பாருங்க பார்ப்போம்.. திரிணாமுல் காங்கிரசுக்கு சவால் விடுத்த பா.ஜ.க.
ஜோதிபிரியா மால்லிக்

பா.ஜ.க.வின் எழுச்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் மரியாதை இல்லாதது போன்ற காரணங்களால் அந்த கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் பா.ஜ.க.வுக்கு தாவி வருகின்றனர். திரிணாமுல் காங்கிரசில் இருந்த சுவேந்து ஆதிகாரி உள்பட பல எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவினர். இந்த சூழ்நிலையில், திரிணாமுல் காங்கிரஸிலிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் கட்சியில் சேர வரிசையில் நிற்கிறார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், அம்மாநில அமைச்சருமான ஜோதிபிரியா மால்லிக் தெரிவித்தார்.

எங்க கட்சி பூத் தலைவரை உங்க கட்சிக்கு இழுத்து பாருங்க பார்ப்போம்.. திரிணாமுல் காங்கிரசுக்கு சவால் விடுத்த பா.ஜ.க.
திலிப் கோஷ்

ஜோதிபிரியா மால்லிக் பேச்சுக்கு மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் திலிப் கோஷ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: எங்க கட்சியின் ஒரு பூத் தலைவரை உங்க கட்சியில் சேறுமாறு வற்புறுத்துங்க என்று மால்லிக் பாபுவிடம் கேட்டுக்கொள்கிறேன். அப்படி அவர் செய்தால் நான் அவர் கூற்றை (கட்சிக்கு திரும்புகிறார்கள்) ஏற்றுக்கொள்கிறேன். அடுத்த மாதம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் குறைந்தபட்சம் 50 பேர் பா.ஜ.க.வில் சேர உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.