எம்.பி-க்களை ராஜினாமா செய்யவைத்து தேர்தலை சந்திக்கத் தயாரா? – தி.மு.க-வுக்கு பா.ஜ.க சவால்!

 

எம்.பி-க்களை ராஜினாமா செய்யவைத்து தேர்தலை சந்திக்கத் தயாரா? – தி.மு.க-வுக்கு பா.ஜ.க சவால்!


இந்தி எதிர்ப்பு என்பதை முன்வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க தயாராக உள்ளதா என்று பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தி திணிப்பை எதிர்த்து நெட்டிசன்கள் பலரும் குரல் கொடுக்க அதன் பின்னணியில் தி.மு.க-தான் உள்ளது என்று அதை திசை மாற்றி வருகின்றனர் பா.ஜ.க-வினர். அதே நேரத்தில் இந்தி தெரியாது போடா நாடு அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல மாநிலங்களும் இதைப் பின்பற்றத் தொடங்கியுள்ளன.


தி.மு.க-வை எதிர்ப்பதாக நினைத்து தமிழை பா.ஜ.க-வினர் எதிர்த்து வருகின்றனர். தமிழுக்கு எதிராகவும் இந்திக்கு ஆதரவாகவும் சமூக ஊடகங்களில் பா.ஜ.க-வினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தமிழக மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எம்.பி-க்களை ராஜினாமா செய்யவைத்து தேர்தலை சந்திக்கத் தயாரா? – தி.மு.க-வுக்கு பா.ஜ.க சவால்!


இந்த நிலையில் தமிழக பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தி.மு.க-வுக்கு சவால் விடுத்துள்ளார். அதில், “திமுகவுக்கு ஒரு சவால்… 2021 தேர்தலில் இந்தி எதிர்ப்பை முக்கிய கோரிக்கையாக முன்வைக்கத் தயாரா? இதற்கு வலுசேர்க்க திமுகவின் 38 MP க்களும் ராஜினாமா செய்து மீண்டும் அசெம்பினி தேர்தலோடு போட்டியிடத் தயாரா? ” என்று கேட்டுள்ளார்.


தி.மு.க கூட்டணிக்குத்தான் 38 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் வெற்றி பெற்றவர்களை எல்லாம் தி.மு.க கணக்கில் சேர்த்துப் பதிவிட்டுள்ளார் எஸ்.ஆர்.சேகர். ஆறு வருட பா.ஜ.க அரசின் தோல்வியை எதிர்கொள்ள மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கத் தயாரா என்று நெட்டிசன்கள் பலரும் பதில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.