பாஜக சார்பில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்ட நபர் மோசடி வழக்கில் கைது

 

பாஜக சார்பில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்ட நபர் மோசடி வழக்கில் கைது

பாஜக சார்பில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்ட நபர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக சார்பில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்ட நபர் மோசடி வழக்கில் கைது

பாஜக தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் வங்கியில் லோன் வாங்கித் தருவதாக 92 லட்சம் மோசடி செய்த நாகராஜ் சாகர் கைது செய்யப்பட்டார். வங்கியில் லோன் வாங்கி தருவதாக கூறி முஹம்மது நூர்தீன் என்பவரிடம் 75 கோடி ரூபாய் லோன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைக்கூறி, அதற்கு 60 லட்சம் பணமாகவும், 30 லட்சம் நகையாகவும் வாங்கி இருக்கிறர். இதனையடுத்து பா.ஜ.க கட்சியை சேர்ந்த நாகராஜ் கடந்த 2019 ம் ஆண்டு தலைமறைவானார். இதுகுறித்து சாஸ்திரிநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 2016 ம் ஆண்டில் பாஜக சார்பில் ராணிப்பேட்டை தொகுதியின் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியுற்றார். நாகராஜ் தன்னை முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பேரன் எனக்கூறி தொழிலதிபர் ஃபெவினா என்பவருக்கு ஈசிஆர் பகுதியில் குறைந்த விலையில் பங்களா வாங்கித்தருவதாக கூறி ஒரு கோடிக்கும் அதிகமாக மோசடி செய்த வழக்கில் 2017 ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடதக்கது.