காங்கிரசுடன் அப்புறம் சண்டை போடலாம், இப்பம் சீனாவுடன்தான் போரிட வேண்டும்.. பா.ஜ.க.வை தாக்கிய சிவ சேனா…

காங்கிரசுடன் அப்புறம் சண்டை போடலாம், இப்பம் சீனாவுடன்தான் போரிட வேண்டும்.. பா.ஜ.க.வை தாக்கிய சிவ சேனா…

இந்திய-சீன எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே கடுமையான மோதல் நிலவுகிறது. மேலும் சீன ராணுவம் எல்லையில் படைகளை குவித்து வருகிறது. பதிலுக்கு இந்திய ராணுவமும் படைகளை குவித்து வருகிறது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் எதிர்கட்சியான காங்கிரஸ் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் என்ன நடக்கிறது என்ற உண்மையை சொல்லும்படி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

காங்கிரசுடன் அப்புறம் சண்டை போடலாம், இப்பம் சீனாவுடன்தான் போரிட வேண்டும்.. பா.ஜ.க.வை தாக்கிய சிவ சேனா…

இதற்கு பதிலடியாக ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீன தூதரகம் நன்கொடை கொடுத்த விவகாரத்தை பா.ஜ.க. தலைவர்கள் எழுப்பி காங்கிரசுக்கு குடைச்சல் கொடுக்க தொடங்கியுள்ளனர். பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இது தொடர்பாக கூறுகையில், 2005-06ஆம் ஆண்டுகளில் சீனா மற்றும் சீன தூதரகத்திடமிருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளை 3 லட்சம் டாலர் பெற்ற தகவல் என்னை திகைக்க வைத்தது. இது சீனாவுக்கும், காங்கிரசுக்கும் இடையிலான ரகசிய உறவு என குற்றம் சாட்டினார்.

காங்கிரசுடன் அப்புறம் சண்டை போடலாம், இப்பம் சீனாவுடன்தான் போரிட வேண்டும்.. பா.ஜ.க.வை தாக்கிய சிவ சேனா…

இந்த சூழ்நிலையில் சிவ சேனாவின் அரசியல் பத்திரிகையான சாம்னாவில், ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நன்கொடை விவகாரத்தில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீனாவுடான பிரச்சினையில் தீர்ப்பதில் பா.ஜ.க. அரசு கவனம் செலுத்த வேண்டும். காங்கிரசுடன் எப்போது வேண்டுமானாலும் சண்டையிடலாம், இப்போது சீனாவுடன் போரிட வேண்டும். ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனா வழங்கிய நன்கொடைக்கும், எல்லையில் சீன ஊடுருவல் அதனை தொடர்ந்து நமது வீரர்கள் வீரமரணம் அடைந்தற்கும் ஏதாவது சம்பந்தம் இருந்தால் அதனை பா.ஜ.க. அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.