“எம்எல்ஏ-க்களை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்குகிறது பாஜக” ராகுல்காந்தி

 

“எம்எல்ஏ-க்களை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்குகிறது பாஜக”  ராகுல்காந்தி

அரசியல் சாசன அமைப்புகளை பாஜக படிப்படியாக அழித்து வருகிறது பாஜக என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை, கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகிறது. அத்துடன் தேசிய கட்சி தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட முனைப்பு காட்டி வருகின்றனர்.அந்த வகையில் தூத்துக்குடி, நெல்லை ,தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார்.

“எம்எல்ஏ-க்களை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்குகிறது பாஜக”  ராகுல்காந்தி

இந்நிலையில் தூத்துக்குடியில் வழக்கறிஞர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடலில் பேசிய போது, “அரசியல் சாசன அமைப்புகளை பாஜக படிப்படியாக அழித்து வருகிறது பாஜக. நாட்டில் உள்ள ஊடகங்கள் பாஜகவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்க முடியாத அளவுக்கு அச்சுறுத்தப்படுகின்றன. சிபிஐ, அமலாக்கப் பிரிவு என்னை எதுவும் செய்ய முடியாது, நான் அச்சப்படமாட்டேன். இந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்பதால் என்னை பாஜகவால் அச்சுறுத்த முடியவில்லை. ஜனநாயக அமைப்புகளை பாஜக தொடர்ந்து அழித்து வருகிறது. காங். ஆளும் மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்குகிறது . ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளி வீசி பாஜக தேர்தலை சந்திக்கிறது. அனைத்து மாநில உரிமைகளிலும் மத்திய அரசு தலையிடுகிறது; மாநிலங்களை அதிகாரம் இல்லாத வகையில் மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது” என்றார். இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மாலை 5 மணிக்கு பரப்புரை மேற்கொள்ளும் அவர் மாலை 6 மணிக்கு நாங்குநேரி டோல்கேட் அருகே நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.