“நீட் தேர்வை கொண்டு வந்தது பாஜக ; ஆதரித்தது அதிமுக” : முதல்வரின் குற்றச்சாட்டுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!

“நீட் தேர்வை கொண்டு வந்தது பாஜக ; ஆதரித்தது அதிமுக” : முதல்வரின் குற்றச்சாட்டுக்கு  மு.க.ஸ்டாலின் பதிலடி!

திணிப்பை தான் எதிர்க்கிறோம்; மொழியை அல்ல என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

சட்ட பேரவை கூட்டத் தொடரின் போது கேள்வி நேரத்தில் நீட் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, நீட் தேர்வினால் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் திமுக தான் என்று குற்றச்சாட்டினார்.

“நீட் தேர்வை கொண்டு வந்தது பாஜக ; ஆதரித்தது அதிமுக” : முதல்வரின் குற்றச்சாட்டுக்கு  மு.க.ஸ்டாலின் பதிலடி!

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோமே தவிர இந்தி என்ற மொழியை அல்ல. திமுக மத அடிப்படைவாதத்திற்கு தான் எதிரிகளே தவிர மதங்களுக்கு அல்ல. நாம் தமிழ்நாட்டுக்கான உரிமைகளுக்காக போராடுபவர்களை தவிர பிரிவினைவாதிகள் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கூறியுள்ள அவர், நீட் தேவை கொண்டுவந்தது பாஜக; ஆதரித்தது அதிமுக என முதல்வர் குற்றச்சாட்டுக்கு மு க ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

“நீட் தேர்வை கொண்டு வந்தது பாஜக ; ஆதரித்தது அதிமுக” : முதல்வரின் குற்றச்சாட்டுக்கு  மு.க.ஸ்டாலின் பதிலடி!

மேலும் 18.7.13 ஆம் தேதி ஆட்சிக்கு வந்த ஐ.மு கூட்டணி ஆட்சி 2014 வரை இருந்தது. அப்போது நீட் வரவில்லை ; நீட்தேர்வு நடக்கவில்லை. நீட் தேர்வு நடத்தப்படுவதற்கான அவசர சட்டம் பாஜக அரசால் 2016 ஆம் ஆண்டு கொண்டுவரப் பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சட்ட வழிகளை பயன்படுத்தி, பேரவை அதிகாரத்தைப் பயன்படுத்தி நீட் ரத்து செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார்.