பா.ஜ.க., காங்., கம்யூ பெற்ற நன்கொடைப் பணம் எவ்வளவு?

 

பா.ஜ.க., காங்., கம்யூ பெற்ற நன்கொடைப் பணம் எவ்வளவு?

2018 – 2019 -ம் நிதி ஆண்டில் தேசிய அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி நாட்டிலேயே அதிக நன்கொடை பெற்ற கட்சியாக பா.ஜ.க திகழ்கிறது. ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற நன்கொடை விவரம் வருமாறு: பாரதிய ஜனதா கட்சி – ரூ. 698

பா.ஜ.க., காங்., கம்யூ பெற்ற நன்கொடைப் பணம் எவ்வளவு?

கோடி,காங்கிரஸ் -ரூ.122.50 கோடி, திரிணாமுல் காங்கிரஸ் -ரூ. 44.26 கோடி, தேசியவாத காங்கிரஸ் ரூ. 12.05 கோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ரூ.3.02 கோடி,இந்திய கம்யூனிஸ்ட் – ரூ.1.5 கோடி
இந்த நன்கொடைகள் அறக்கட்டளைகள் மூலம் ரூ.612.65 கோடி,தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ. 64.51 கோடி, ரியல் எஸ்டேட் மூலம் ரூ. 31.98 கோடி,

பா.ஜ.க., காங்., கம்யூ பெற்ற நன்கொடைப் பணம் எவ்வளவு?

ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் நகைக்கடைகள் உள்ளிட்டவை மூலம்ரூ. 24.98 கோடி இதர வழிகளில் ரூ.282.19 கோடி பெறப்படுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அரசியல் கட்சிகளுக்கு அதிகப்படியாக நன்கொடை அளித்தவர்கள் டாடா நிறுவனமும், பாரதி என்டர்பிரைசஸ் நிறுவனமும்தான்.

பா.ஜ.க., காங்., கம்யூ பெற்ற நன்கொடைப் பணம் எவ்வளவு?

டாடா நிறுவனத்தின் அறக்கட்டளை வழங்கிய தொகை பா.ஜ.க.வுக்கு ரூ.356.53 கோடி,காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 55.62 கோடி,திரிணாமுல் காங்.கட்சிக்கு ரூ. 42.98 கோடி ஆகும்.
பாரதி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் அறக்கட்டளை சார்பில் பா.ஜ.க.வுக்கு ரூ. 67.25 கோடி, காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 34 கோடி,தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 1 கோடி வழங்கப்பட்டுள்ளது.