இவங்க மட்டும் இந்தி கற்றுக் கொடுப்பார்களாம்… தி.மு.க-வினர் கல்வி நிறுவனங்கள் முன்பு மவுன போராட்டம் அறிவித்த பா.ஜ.க!

இவங்க மட்டும் இந்தி கற்றுக் கொடுப்பார்களாம்… தி.மு.க-வினர் கல்வி நிறுவனங்கள் முன்பு மவுன போராட்டம் அறிவித்த பா.ஜ.க!

மூன்று மொழிக் கொள்கையின் கீழ் தமிழக மாணவர்கள் இந்தி படிக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் தி.மு.க-வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தி.மு.க-வினர் நடத்தும் கல்வி நிறுவனங்கள் முன்பு போராட்டம் நடத்துவது என்று பா.ஜ.க இளைஞரணி முடிவு செய்துள்ளது.

இவங்க மட்டும் இந்தி கற்றுக் கொடுப்பார்களாம்… தி.மு.க-வினர் கல்வி நிறுவனங்கள் முன்பு மவுன போராட்டம் அறிவித்த பா.ஜ.க!

தமிழகத்தில் கட்டாய இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுக்கப்படுவதற்கு தடை இல்லை. அதே நேரத்தில் தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் என்று கூறி கட்டாய இந்தியை திணிப்பதையும் யாரும் பொருட்படுத்துவது இல்லை.
தமிழத்தில் இந்தியை எதிர்க்கிறார்கள் என்று பா.ஜ.க-வினர் தவறான பிரசாரம் செய்து வருகின்றனர். இரு மொழிக் கொள்கை என்பது தமிழக அரசின் நிலைப்பாடு என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திக்கு தி.மு.க மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பது போல பா.ஜ.க-வினர் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இவங்க மட்டும் இந்தி கற்றுக் கொடுப்பார்களாம்… தி.மு.க-வினர் கல்வி நிறுவனங்கள் முன்பு மவுன போராட்டம் அறிவித்த பா.ஜ.க!

இந்த நிலையில் மதுரையில் நடந்த பா.ஜ.க இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் தி.மு.க-வினர் நடத்தும் பள்ளிகள் முன்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை பா.ஜ.க இளைஞரணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடந்தது. மாநில இளைரணித் தலைவர் வினோத் செல்வம் இதில் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர், “தமிழகத்தில் நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு பா.ஜ.க இளைஞரணி சார்பில் வாகன வசதி செய்யப்படும். மோடி பிறந்த நாளையொட்டி ஏழாயிரம் ரத்த தான முகாம்கள் நடத்தப்படும். இந்தியை எதிர்ப்பதாக காட்டிக்கொள்ளும் தி.மு.க தலைவர்கள், தங்கள் பள்ளிகளில் அதை மூன்றாவது மொழியாக கற்றுத் தருகின்றனர். இந்த விஷயத்தில் இரட்டை வேடம் போடுகிறார்கள். இதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க தி.மு.க தலைவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் முன்பு மவுன போராட்டம் நடத்தப்படும்” என்றார்.