“விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டில் ஜல்லிக்கட்டு வீரர்கள்”- பாஜக

 

“விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டில் ஜல்லிக்கட்டு வீரர்கள்”- பாஜக

பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், “நிலத்தடி நீர்மட்டம் உயர தமிழகத்தில் காவிரி போன்ற ஆறுகளின் குறுக்கே ஒரு லட்சம் தடுப்பணிகள் கட்டப்படும். நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும். தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கை முழுமையாக அமல்படுத்தப்படும். தாய்மொழியில் மருத்துவம் மற்றும் தொழிற்கல்வி பயிற்றுவிக்கப்படும். டாஸ்மாக்கில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். வேலை இழக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் அரசின் வேறு பிற துறைகளில் பணியமர்த்தப்படுவர். அருந்ததியர் நல வாரியம் அமைக்கப்படும்

“விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டில் ஜல்லிக்கட்டு வீரர்கள்”- பாஜக

வழிபாட்டு உரிமை என்பது கட்டாயமாக மதம் மாற்றுகின்ற உரிமையாகாது. ஆசை வார்த்தை காட்டி அச்சுறுத்தி மதம் மாற்றுவது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும், கட்டாய மத மாற்றத் தடை சட்டம் கொண்டுவரப்படும். அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பசு இனத்தைப் பாதுகாக்கப்பசுவதைத் தடை சட்டம் முறையாக அமல்படுத்தப்படும். இறைச்சிக்காக கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்குப் பசுக்கள் கடத்தப்படுவது முற்றிலும் தடுக்கப்படும். அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் ஜல்லிக்கட்டு வீரர்களும் இணைக்கப்படுவர். சிலம்ப விளையாட்டை தேசிய விளையாட்டாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மின் சிக்கனத்தை முழுமையாக கடைபிடிக்க குடும்ப அட்டைக்கு மூன்று சி.எப். எல் மற்றும் எல்.இ.டி பல்புகள் இலவசமாக வழங்கப்படும்” உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.