“பெட்ரோல், கேஸ் விலை ஏத்துனா எங்களுக்கு ஓட்டு விழாதா” :அண்ணாமலையின் ஓவர் கான்ஃபிடன்ட்!!

“பெட்ரோல், கேஸ் விலை ஏத்துனா எங்களுக்கு ஓட்டு  விழாதா” :அண்ணாமலையின் ஓவர் கான்ஃபிடன்ட்!!

சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

“பெட்ரோல், கேஸ் விலை ஏத்துனா எங்களுக்கு ஓட்டு  விழாதா” :அண்ணாமலையின் ஓவர் கான்ஃபிடன்ட்!!

சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், தேமுதிக ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதேபோல் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதி பேரவை கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு தொகுதி பங்கீடும் முடிவுக்கு வந்துவிட்டது.

“பெட்ரோல், கேஸ் விலை ஏத்துனா எங்களுக்கு ஓட்டு  விழாதா” :அண்ணாமலையின் ஓவர் கான்ஃபிடன்ட்!!

இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள பாஜக துணை தலைவர் அண்ணாமலை, “ஒரே தொகுதியை கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்பது என்பது வழக்கமானது தான். எங்களுக்கு வழங்கப்படும் 20 தொகுதிகளும் வெற்றி தொகுதிகள் தான். பாஜக வேட்பாளர் 20 தொகுதிகளிலும் வெற்றிபெறுவார்கள்” என்றார்.

“பெட்ரோல், கேஸ் விலை ஏத்துனா எங்களுக்கு ஓட்டு  விழாதா” :அண்ணாமலையின் ஓவர் கான்ஃபிடன்ட்!!

தொடர்ந்து பேசிய அவர், “பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேஸ் விலையுயர்வால் பாஜக மீது தமிழக மக்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறுகிறார்கள். இதெல்லாம் சின்ன சின்ன பிரச்னைகள் . பெட்ரோல் ,டீசல் ,கேஸ் விலை உயர்வால் மக்கள் அதிமுக – பாஜக கூட்டணியை வெறுக்க மாட்டார்கள். பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறையும்.வீடு இல்லாதவர்களுக்கு வீடு, கேஸ் அடுப்பு உள்ளிட்ட பல நலத்திட்டங்களை அரசு கொடுத்துள்ளது. தேர்தலுக்காக கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கும் கட்சி பாஜக இல்லை ” என்று கூறினார்.