எடப்பாடி ஒரு கில்லாடி… அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு!

 

எடப்பாடி ஒரு கில்லாடி… அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு!

அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் 12ம் தேதி தொடங்கவிருப்பதால், தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை விரைவில் முடித்துவிட அதிமுக மும்முரம் காட்டி வருகிறது. அதிமுகவுக்கு முட்டுக் கட்டையாக இருந்த சசிகலாவும் தற்போது அரசியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்து விட்டதால், அதிமுக தனது முழு கவனத்தையும் திமுக மீது செலுத்தியிருக்கிறது. 3ஆவது முறையாக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள ஸ்கெட்ச் போட்டிருக்கும் அதிமுக, 170 தொகுதிகளில் தனது வேட்பாளரையே களமிறக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அதிமுக பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது. தேமுதிகவுக்கு 15 தொகுதிகளை வழங்க அதிமுக முன்வந்துள்ளது.

எடப்பாடி ஒரு கில்லாடி… அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு!

இந்த நிலையில், அதிமுகவிடம் பாஜக கொடுத்துள்ள தொகுதி பட்டியலில் 40 தொகுதிகளை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அதிமுக 20 தொகுதிகளை மட்டுமே வழங்கியுள்ளது. இதற்கான தொகுதி பங்கீட்டில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேசிய பொதுச்செயலாளர் சிடி ரவி மற்றும் பாஜக மாநில தலைவர் எல். முருகன் கையெழுத்திட்டுள்ளனர். இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பாஜக வேட்பாளருக்கு அதிமுக தனது முழு ஆதரவை அளிக்கும் என்றும் உடன்பாட்டில் குறிப்பிட்டுள்ளது.