‘காங்கிரஸ் கூட்டணியை பின்னுக்கு தள்ளி’ பாஜக கூட்டணி முன்னிலை!

 

‘காங்கிரஸ் கூட்டணியை பின்னுக்கு தள்ளி’ பாஜக கூட்டணி முன்னிலை!

பீகார் சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில், பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

பீகார் சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தும், ஆளும் ஜனதா தளம் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்தும் நேரடியாக களம் கண்ட நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், தற்போது முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார் மீண்டும் அரியணை ஏற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

‘காங்கிரஸ் கூட்டணியை பின்னுக்கு தள்ளி’ பாஜக கூட்டணி முன்னிலை!

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே இழுபறி நிலவு வந்தது. அதாவது, இரு தரப்பும் சரிசமமான இடங்களை கைப்பற்றி கடுமையான போட்டி நிலவி வந்தது.

‘காங்கிரஸ் கூட்டணியை பின்னுக்கு தள்ளி’ பாஜக கூட்டணி முன்னிலை!

இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணியை பின்னுக்கு தள்ளி, பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக கூட்டணி தற்போது 129 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 99 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களை விட பாஜக கூட்டணி, அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.