“தோல்விக்கு பாஜக கூட்டணிதான் காரணம்” – அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு!

 

“தோல்விக்கு பாஜக கூட்டணிதான் காரணம்” – அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு!

தோல்விக்கு பாஜக கூட்டணிதான் காரணம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

“தோல்விக்கு பாஜக கூட்டணிதான் காரணம்” – அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக -பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த கூட்டணியில் பாமக ,தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சீட்டுகள் ஒதுக்கப்பட்டது. இதில் 4 தொகுதிகளில் மட்டுமே பாஜகவால் வெற்றி பெற முடிந்தது. மீதமுள்ள 16 இடங்களில் தோல்வியைத் தழுவியது. இந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது .மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என அதிமுகவின் கனவு தவிடு பொடியானது. இதைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தோல்வி குறித்து ஆலோசித்தார்.

“தோல்விக்கு பாஜக கூட்டணிதான் காரணம்” – அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு!

இந்நிலையில் விழுப்புரத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், “அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்ததுதான் தோல்விக்கு காரணம் என கூறியுள்ளார். . தொடர்ந்து பேசியவர் நாம் 3வது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருப்போம். ஆனால் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் பாஜக கூட்டணி தான். மக்கள் அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க விரும்பினார்கள். ஆனால் கூட்டணி கணக்கில் தவறு நிகழ்ந்தால் தோல்வியை தழுவி விட்டோம். பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மையினர் ஓட்டு நமக்கு வரவில்லை. பாஜகவுடன் கூட்டணி சேராமல் இருந்தால் சிறுபான்மையினர் நமக்கு வாக்களித்திருப்பார்கள். மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சியே நடந்து இருக்கும்” என்றார். சி.வி.சண்முகத்தின் இந்த பேச்சு அதிமுக -பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.