பாஜக – அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை : ஓபிஎஸ் விளக்கம்!

 

பாஜக – அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை : ஓபிஎஸ்  விளக்கம்!

முதல்வர் வேட்பாளரை நாங்கள் ஆரம்பத்திலேயே சொல்லி விட்டோம் என துணை முதல்வர் ஓபிஎஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார் .

பாஜக – அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை : ஓபிஎஸ்  விளக்கம்!

2021 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் ஆயத்தமாகியுள்ளன. முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்கி நடத்தி வருகிறார். அதேபோல் ஜனவரி மாதம் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரையை தொடங்கவுள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலிலும் பாஜக – அதிமுக கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று முடிவாகியுள்ள நிலையில் அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக, தேர்தலுக்கு பின்பே முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என கூறி வருகின்றனர். இந்த அதிமுக – பாஜக கூட்டணிக்குள் சலசலப்பு நிலவி வருகிறது.

பாஜக – அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை : ஓபிஎஸ்  விளக்கம்!

இந்நிலையில் தேனியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறியபோது அதை மனதார வரவேற்றவன் நான்; தற்போது அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார். ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன், உடல் நலத்துடன் வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன். எனது தேர்தல் பரப்புரையை உரிய நேரத்தில் தொடங்குவேன்” என்றார். தொடர்ந்து பேசிய அவரிடம், தேர்தலுக்குப் பின்னர் தான் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என பாஜக கூறியது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓபிஎஸ் முதல்வர் வேட்பாளர் தொடர்பான கருத்தை ஆரம்பத்திலேயே நாங்கள் கூறி விட்டோம் என்று கூறினார்.