பாஜக தேர்தல் விளம்பரத்தில் கார்த்திக் சிதம்பரம் மனைவி!

 

பாஜக தேர்தல் விளம்பரத்தில் கார்த்திக் சிதம்பரம் மனைவி!

பாஜக விளம்பரத்தில் தனது புகைப்படத்தை பயன்படுத்தியதற்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி இடம்பெற்றிருப்பது படு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாஜக தேர்தல் விளம்பரத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மருமகளும், சிவகங்களை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவியுமான ஸ்ரீநிதி, பரதநாட்டியத்தின் ஒரு பகுதியை பயன்படுத்தியுள்ளனர். ஸ்ரீநிதியின் இந்த நடனம், முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ என்ற பாடலுக்கு ஆடியபோது எடுக்கப்பட்டது.

அந்த கிளிப்பை தற்போது எடுத்து கட் செய்து தேர்தல் விளம்பரத்தோடு இணைத்து, காங்கிரஸ் குடும்பத்தார் பாஜகவுக்கு வாக்களிப்பதுபோன்ற தோரணையை பாஜகவினர் ஏற்படுத்தியுள்ளனர். இந்த விளம்பரத்தை தமிழக பாஜக தனது ட்விட்டரில் பதிவிட்டு, “தாமரை மலரட்டும்; தமிழகம் வளரட்டும்.. வாக்களிப்பீர் தாமரைக்கே!!” எனக் குறிப்பிட்டுள்ளது. இதற்கு ஸ்ரீநிதி கார்த்திக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் தாமரை என்றுமே மலராது என்றும் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.