ஓபிஎஸ்-ஈபிஎஸ் உடன் பாஜகவினர் ஆலோசனை! தேமுதிக விலகியதால் அதிக தொகுதி கேட்டு வம்பு!!

 

ஓபிஎஸ்-ஈபிஎஸ் உடன் பாஜகவினர் ஆலோசனை! தேமுதிக விலகியதால் அதிக தொகுதி கேட்டு வம்பு!!

இன்றைய அரசியல் செய்திகளில் ஹாட் டாப்பிக்காக மாறியிருப்பது அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியதே. அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள். அதிமுகவை கடுமையாக விமர்சித்து ஆர்ப்பரிக்கிறார்கள். கொண்டாட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தேமுதிகவினர் துள்ளிக்குதித்துக் கொண்டிருக்கிறார்கள். 25 சீட்டு வரை கேட்ட தேமுதிகவுக்கு 13 சீட்டை தாண்டி கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டதால் தேமுதிக வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

ஓபிஎஸ்-ஈபிஎஸ் உடன் பாஜகவினர் ஆலோசனை! தேமுதிக விலகியதால் அதிக தொகுதி கேட்டு வம்பு!!

இந்த சூழலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை நடத்திவருகின்றனர். அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதால் தொகுதி பங்கீட்டில் மாறுதல் செய்ய பாஜக கோருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவுக்கு 20 தொகுதிகளை அதிமுக வழங்கிய நிலையில் கூடுதல் தொகுதி வழங்குமாறு பாஜக கோரிக்கை விடுத்துவருகின்றனர். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளின் பட்டியலை இறுதி செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.