ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு இல்லையென கூறிய விவகாரம்; பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

 

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு இல்லையென கூறிய விவகாரம்; பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு இல்லை மத்திய அரசு கூறிய விவகாரத்தில் மாநிலங்கள் அரசியல் செய்வதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவில்லை என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே மத்திய அரசு இதனை தெரிவித்தது. ஆனால் அந்த தகவல்களை தற்போது மாநில அரசுகள் மாற்றிக் கூறி அரசியல் செய்து வருகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரு நோயாளிகள் கூட உயிரிழக்கவில்லை என மாநில அரசுகள் தான் தெரிவித்தன என்று குற்றஞ்சாட்டினார்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு இல்லையென கூறிய விவகாரம்; பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

மேலும், இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவிக்கும் காங்கிரஸ், தான் ஆளும் மாநில முதல்வர்களுடன் முதலில் பேச்சுவார்த்தை வேண்டும். ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இந்த விவகாரத்தை கையில் எடுத்து அரசியல் செய்கிறார்கள் என்று தெரிவித்தார்.முன்னதாக ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள் குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணங்கள் ஏற்படவில்லை. மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த தரவுகளில் உயிரிழப்புகள் பதிவானதாக குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இரண்டாம் அலையில் ஆக்சிஜன் இல்லாமல் பலர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்புகள் இல்லையென மத்திய அரசு தெரிவித்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், இதற்கு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தான் பொறுப்பு என பாஜக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.