எங்களை காக்கும் கபசுரரே! மதுரையை தெறிக்கவிடும் விஜயின் பிறந்தநாள் போஸ்டர்

 

எங்களை காக்கும் கபசுரரே! மதுரையை தெறிக்கவிடும் விஜயின் பிறந்தநாள் போஸ்டர்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய்யின் 46வது பிறந்தநாள் வரும் ஜூன் 22ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து ஜூன் தொடங்கியதிலிருந்தே ட்விட்டரில் கொண்டாட தொடங்கிவிட்டனர் அவர்களது ரசிகர்கள். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்றும், முடிந்த அளவு நலப்பணிகளை செய்யுங்கள் என்றும் நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். இருப்பினும் அவரது ரசிகர்கள் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பல விதமான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

எங்களை காக்கும் கபசுரரே! மதுரையை தெறிக்கவிடும் விஜயின் பிறந்தநாள் போஸ்டர்

இந்நிலையில் மதுரை வடக்குமசி வீதி சென்ட்ரல் திரையரங்கம் பகுதியில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அந்த போஸ்டரில் கேரளா போன்று நேர்மையான அரசாகவும், ஆந்திரா போன்று மக்களுக்கான அரசாகவும், டெல்லியை போன்று ஊழலற்ற அரசாக தமிழ்நாடு அமைய வாத்தியார் வர வேண்டும் என நடிகர் விஜய்யை குறிப்பிடும் வகையிலும், தமிழகத்தின் முதல்வராக நடிகர் விஜய் வர வேண்டும் என விருப்பம் தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் போஸ்டரில் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்நிர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வரிசையில் நடிகர் விஜய் படமும் ஒட்டப்பட்டுள்ளது.