காமராஜர் பிறந்த நாள்… பள்ளி கல்வி இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை

 

காமராஜர் பிறந்த நாள்… பள்ளி கல்வி இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை

முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த தினம் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

காமராஜர் பிறந்த நாள்… பள்ளி கல்வி இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கைபள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம்தேதி கல்வி வளர்ச்சி நாளாக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.

காமராஜர் பிறந்த நாள்… பள்ளி கல்வி இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கைதற்போது கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் செயல்படாத காரணத்தால் 15 ம்தேதி அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், வட்டாரக்கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து கல்வி அலுவலகங்களில் காமராஜரின் திருஉருவப்படத்தை அலங்கரித்து கல்வி வளர்ச்சி நாளை சிறப்பாக கொண்டாடவேண்டும்” என்று கூறியுள்ளார்.