பறவை காய்ச்சல் எதிரொலி – கேரள எல்லையில் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு

 

பறவை காய்ச்சல் எதிரொலி – கேரள எல்லையில் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு

தேனி

பறவை காய்ச்சல் எதிரொலியாக தேனி மாவட்ட எல்லை பகுதிகளில் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் சூழ்நிலையில், தமிழகத்தில் அதன் தாக்கத்தை குறைக்க, கால்நடை பராமரிப்பு துறையினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் பறவை காய்ச்சலை தடுக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவின் பேரில், கால்நடை பராமரிப்பு துறையினர் 23 குழுக்களாக பிரிந்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறன்றனர்.

பறவை காய்ச்சல் எதிரொலி – கேரள எல்லையில் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு

குறிப்பாக, அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், தேனி மாவட்டத்தின் எல்லைகளான கம்பம் மெட்டு மற்றும் போடி மெட்டு பகுதிகளில் 8 மருத்துவ குழுவினர் தங்கியிருந்து, வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகள் உள்ளிட்ட பறவைகள் இருக்கும் பகுதிகளை கால்நடை பராமரிப்பு துறையினர் நேற்றிவு முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.