‘பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவலாம்’ – ராதாகிருஷ்ணன் பேட்டி!

 

‘பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவலாம்’ – ராதாகிருஷ்ணன் பேட்டி!

கேரளாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

‘பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவலாம்’ – ராதாகிருஷ்ணன் பேட்டி!

சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கேரளாவில் பரவியுள்ள பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவலாம். பறவை காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழைக்காலம் என்பதால் டெங்கு பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு 5 மடங்கு குறைந்துள்ளது. ஹோட்டல் ஊழியர்கள் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோரிடம் கொரோனா பரிசோதனை செய்ததில் 166 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது’ என்று கூறினார்.

‘பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவலாம்’ – ராதாகிருஷ்ணன் பேட்டி!

கேரள மாநிலத்தின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் வாத்து மற்றும் கோழிகள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்தன. உயிரிழந்த வாத்துகளை பரிசோதனை செய்ததில், அவை ‘எச் 5 என் 8’ என்னும் பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, இந்த காய்ச்சல் தமிழகத்திற்கும் பரவாமல் தடுக்க அங்கிருந்து கொண்டு வரப்படும் கோழிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், இந்த காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவலாம் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.