வீடுகளில் விவேகானந்தர் படத்தை தொங்கவிட்டால் இன்னும் 30 ஆண்டுகளுக்கு பா.ஜ.க. ஆட்சிதான்.. திரிபுரா முதல்வர்

வீடுகளில் விவேகானந்தர் படத்தை தொங்கவிட்டால் இன்னும் 30 ஆண்டுகளுக்கு பா.ஜ.க. ஆட்சிதான்.. திரிபுரா முதல்வர்

திரிபுராவில் 80 சதவீத வீடுகளில் சுவாமி விவேகானந்தர் படத்தை தொங்கவிட்டால், இன்னும் 30 ஆண்டுகளுக்கு பா.ஜ.க. ஆட்சிதான் இருக்கும் என அம்மாநில முதல்வர் பிப்லாப் குமார் தேப் தெரிவித்தார்.

திரிபுராவில் முதல்வர் பிப்லாப் குமார் தேப் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அகர்தாலாவில் பா.ஜ.க.வின் மகிளா மோர்சா (மகளிர் பிரிவு) கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முதல்வர் பிப்லாப் குமார் தேப் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: நான் பார்த்திருக்கிறேன், என் கிராமத்தில் கூட மக்கள் தங்களது வீடுகளின் வரவேற்பு அறையில், ஜோதி பாசு, ஜோசப் ஸ்டாலின், மாவோ சேதுங் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களின் படங்களை தொங்க விட்டு இருப்பார்கள்.

வீடுகளில் விவேகானந்தர் படத்தை தொங்கவிட்டால் இன்னும் 30 ஆண்டுகளுக்கு பா.ஜ.க. ஆட்சிதான்.. திரிபுரா முதல்வர்
திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப்

நாம் ஏன் சுவாமி விவேகானந்தர் படங்களை வீட்டில் தொங்க விட கூடாது? நம் கட்சி நமது சித்தாந்தங்களையும், மதிப்புகளையும் வைத்திருக்கும். திரிபுராவின் 80 சதவீத வீடுகளில் சுவாமி விவேகானந்தர் படங்கள் தொங்கினால், அப்புறம் இந்த அரசு (பா.ஜ.க.) மேலும் அடுத்த 30 முதல் 35 ஆண்டுகளுக்கு இருக்கும்.

வீடுகளில் விவேகானந்தர் படத்தை தொங்கவிட்டால் இன்னும் 30 ஆண்டுகளுக்கு பா.ஜ.க. ஆட்சிதான்.. திரிபுரா முதல்வர்
பா.ஜ.க.

குறைவாக பேசு, அமைதியாக இரு மற்றும் வேலையில் கவனத்தை செலுத்து என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். நாம் அதிகமாக பேசினால் நமது சக்தி வீணாகும். ஆகையால் நாம் நமது சக்தியை வீணாக்க கூடாது. இந்திய கலாச்சாரம் மற்றும் மதிப்பை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.