இதுவரை வந்த தடுப்பூசிகளில் இதுவே விலை மலிவு – டிசம்பருக்குள் வெளிவரும் இந்தியாவின் 2ஆம் தடுப்பூசி!

இதுவரை வந்த தடுப்பூசிகளில் இதுவே விலை மலிவு – டிசம்பருக்குள் வெளிவரும் இந்தியாவின் 2ஆம் தடுப்பூசி!

இந்தியாவை உருக்குலைத்த கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் தற்போது குறைந்துவருகிறது. மத்திய, மாநில அரசுகள் கொரோனாவைக் கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. அதன்படி பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் இது தற்காலிகாக தீர்வு மட்டுமே, தடுப்பூசி தான் ஒரே தீர்வு என்று மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆதலால் ஊடரடங்கை சாதகமாகப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டுவருகிறது.

இதுவரை வந்த தடுப்பூசிகளில் இதுவே விலை மலிவு – டிசம்பருக்குள் வெளிவரும் இந்தியாவின் 2ஆம் தடுப்பூசி!

ஆனால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மத்திய அரசு உள்நாட்டிலேயே தயாரிக்க ஊக்குவித்து வருகிறது. அதன்படி ஹைதராபாத்தைச் சேர்ந்த Biological-E நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனம் கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரித்துவருகிறது. இது பாரத் பயோடெக்கின் கோவாக்சினுக்கு அடுத்தபடியாக முழுக்க முழுக்க இந்தியாவில் தயாராகும் இரண்டாவது தடுப்பூசியாகும். இதற்காக 1,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 30 கோடி தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளையில் நம்பிக்கையளிக்கும் விதமான முடிவைக் கொடுத்திருக்கிறது. அதில் தகுதிபெற்று தற்போது மூன்றாம் கட்ட சோதனை நடந்துவருகிறது.

இதுவரை வந்த தடுப்பூசிகளில் இதுவே விலை மலிவு – டிசம்பருக்குள் வெளிவரும் இந்தியாவின் 2ஆம் தடுப்பூசி!

இந்த சோதனை நிறைவடைந்தால் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு இந்த தடுப்பூசி இன்னும் அனுமதிக்கப்படவில்லை. ஒருவேளை இது பயன்பாட்டிற்கு வந்தால் இந்தியாவில் மிகவும் மலிவான விலைகொண்ட முதல் தடுப்பூசியாக இது இருக்கும். இந்தத் தடுப்பூசியின் விலையானது இரண்டு டோஸுக்கு 400 ரூபாய் என நிர்ணயிக்கப்படலாம் . தடுப்பூசியின் இறுதி விலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஹெப்படைட்டிஸ்-பி தடுப்பூசிக்குப் பிறகு இந்தக் கொரோனா தடுப்பூசியானது பாரம்பரிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை வந்த தடுப்பூசிகளில் இதுவே விலை மலிவு – டிசம்பருக்குள் வெளிவரும் இந்தியாவின் 2ஆம் தடுப்பூசி!

சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி மாநில அரசுக்கு ஒரு டோஸ் 300 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் வழங்கிவருகிறது. அதேபோல் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி விலை முறையே 400 ரூபாய், 1,200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரஷ்யவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி ஒரு டோஸ் 995 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழுவின் (NEGVAC) பரிந்துரையின்படி தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை வந்த தடுப்பூசிகளில் இதுவே விலை மலிவு – டிசம்பருக்குள் வெளிவரும் இந்தியாவின் 2ஆம் தடுப்பூசி!

Biological-E நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசி அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இந்தியாவில் ஏற்கெனவே பிரிட்டனின் கோவிஷீல்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி ஆகிய இரு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்திய அரசு அனுமதி கொடுத்தது. தற்போது பைசர், மாடர்னோ உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களிடமும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இதுவரை இந்தியாவில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளிலேயே Biological-E தடுப்பூசி தான் விலை குறைவானதாக இருக்கும் என்பதே அதன் ஹைலைட்.