பவானி ஆற்றில் 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு… கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

 

பவானி ஆற்றில் 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு… கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

கோவை

கோவை மாவட்டம் பில்லூர் அணை முழு கொள்ளவை எட்டியதை அடுத்து அணையில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்படுவதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், குந்தா அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால், மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை, தனது முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடியை நேற்று எட்டியது.

பவானி ஆற்றில் 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு… கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

பில்லூர் அணைக்கு தற்போது வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டுள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி, அந்த நீர் முழுமையாக பவானி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், பவானி ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இதன்படி, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.