’கொரோனாவை விட பெரிய ஆபத்து எதிர்காலத்தில் வரும்’ பில்கேட்ஸ் எச்சரிக்கை

 

’கொரோனாவை விட பெரிய ஆபத்து எதிர்காலத்தில் வரும்’ பில்கேட்ஸ் எச்சரிக்கை

கொரோனாவை எப்படி எதிர்கொள்வது… எப்படி அதன் பரவலைத் தடுப்பது… அதனால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கையை எப்படிக் கட்டுப்படுத்துவது… உள்ளிட்டவைதான் இன்றைய உலகில் முன் உள்ள மாபெரும் சவால். ஆனால், துரதிஷ்டசவசமாக இக்கேள்விகளுக்கு பதில்கள் இல்லை.

’கொரோனாவை விட பெரிய ஆபத்து எதிர்காலத்தில் வரும்’ பில்கேட்ஸ் எச்சரிக்கை

கடந்த சுமார் 8 மாதங்களாக, உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது கொரோனா நோய்த் தொற்று. அதற்கான தடுப்பு மருந்து ஆய்வுகள் படுவேகமாக நடந்தாலும் இன்று வரை எந்தத் தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப் படவில்லை. அதனால், இந்நோய் பரவுவதைத் தடுப்பதும், தொற்றியவர்க்கு சிகிச்சை அளிப்பதும் மட்டுமே நம்மிடம் உள்ள வாய்ப்புகள். தடுப்பு மருந்து நடைமுறைக்கு வர எப்படியும் அடுத்த ஆண்டு ஆகிவிடும் என்றே பல தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனாவின் பேரழிவில் உலகம் சிக்கியிருக்கும் சூழலில் ’மைக்ரோசாப்ட்’ பில்கேட்ஸ் மற்றோர் எச்சரிக்கையும் உலக மக்களுக்கு விடுத்துள்ளார். அவர், ‘கொரோனா கிருமி இப்போது மக்கள் ஏராளம் இறக்கிறார்கள். ஒரு லட்சம் பேருக்கு 14 பேர் எனும் கணக்கில் கொரோனா மரணப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், நாம் கார்பன் டை ஆக்ஸைடு அதிகமாவதைக் கட்டுப்படுத்த தவறினால், இதற்கு இணையான பேரழிவைச் சந்திக்க நேரிடலாம்.

’கொரோனாவை விட பெரிய ஆபத்து எதிர்காலத்தில் வரும்’ பில்கேட்ஸ் எச்சரிக்கை

காலநிலை மாற்றத்தால் புவியின் வெப்பநிலை உயர்ந்துவருகிறது. இப்படியே சென்றால் இன்னும் 40 ஆண்டுகளில் அதிகளவில் மக்கள் இறக்க நேரிடலாம். அதிகப்படியாக எனில், ஒரு லட்சத்துக்கு சுமார் 73 பேர். குறைந்தபட்ச விகிதமாக எனில், ஒரு லட்சத்துக்கு 10 பேர் என்பதாக இருக்கும்.

இந்த காலநிலை மாற்றத்தால் மனித உயிர்கள் மட்டுமல்ல, கடும் பொருளாதார நெருக்கடிகளையும் நாடுகள் சந்திக்க நேரிடக்கூடும்’ என்று தெரிவித்துள்ளார்.

இப்போதுள்ள ஆபத்து பெரியதுதான். அதேநேரம் நாளைய ஆபத்து குறித்தும் அந்தந்த நாடுகள் கவலைப் படுவதுடன், அது நேராமல் இருக்க சரியான திட்டங்களைத் தீட்டுவதும் மிக மிக அவசியமான ஒன்று.