பில்கேட்ஸ் – மெலிண்டா விவாகரத்து – நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

பில்கேட்ஸ் – மெலிண்டா விவாகரத்து – நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் – அவரது மனைவி மெலிண்டாவும் விவாகரத்து செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 3ம் தேதி அன்றே இந்த அறிவிப்பு வெளியானாலும் கூட, நீதிமன்றத்தால் அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பில்கேட்ஸ் – மெலிண்டா விவாகரத்து – நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

27 வருட திருமண வாழ்க்கைக்கு பின்னர் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். வாஷிங்டனில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினால் 90 நாட்களுக்கு பின்னரே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதன்படி வாஷிங்டன் கிங் கவுண்டி நீதிமன்றம் பில்கேட்ஸ் – மெலிண்டா இருவரும் விவாகரத்து செய்துகொள்வதாகவும், இருவரும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி சொத்துக்களை பங்கிட்டுக்கொள்ளும்படியும் உத்தரவிட்டுள்ளது.

பில்கேட்ஸ் – மெலிண்டா விவாகரத்து – நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பில்கேட்ஸ் -மெலிண்டாவிடம் 150 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

27 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இந்த தம்பதிகள் திடீரென பிரிவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. வெல்த் டாக்ஸை குறைப்பதற்காக தான் இருவரும் விவாகரத்து செய்து இருக்கிறார்கள் என்று ஒரு தகவல். விவாகரத்து பெற்று சொத்துக்களை பிரித்துக் கொண்டால் வரி குறையும் என்பதற்காக இப்படி செய்து இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள பெரும் பணக்காரர்கள் இவர்களைப் போன்று இனி செய்யக்கூடும் என்றும் ஒரு பேச்சு இருக்கிறது.

பில்கேட்ஸ் – மெலிண்டா விவாகரத்து – நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆனால் இதற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. 2000ம் ஆண்டில் மைக்ரோசாப்ட்டில் பணிபுரிந்த ஒரு பெண்ணுடன் பில்கேட்ஸ் நெருக்கமாக இருந்ததாகவும் 2019ஆம் ஆண்டு இந்த நெருக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் இதைத்தொடர்ந்து அப்போதே இந்த விவகாரத்திற்கு தயாராகி விட்டார் மெலிண்டா என்றும் சிலர் சொல்கின்றனர். இது தொடர்பான மைக்ரோசாஃப்ட் இயக்குனர் அலுவலக சட்ட நிறுவனத்தை அழைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது என்றும், இந்த விசாரணையின் முழுமையான முடிவு வெளிவருவதற்கு முன்பாகவே மைக்ரோசாஃப்ட் இயக்குனர் குழுவில் இருந்து வெளியேறி விட்டார் பில்கேட்ஸ் என்றும், தன் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு வந்தபிறகு அவர் இயக்குனர் குழுவில் இருப்பது சரியில்லை என நிர்வாக இயக்குனர்கள் சொன்னதை அடுத்து அவர் வெளியேறியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் பில்கேட்ஸ் தகவல் தொடர்பு அதிகாரி இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து இருக்கிறார்.

பில்கேட்ஸ் – மெலிண்டா விவாகரத்து – நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாலியல் குற்றவாளி யார் ஜெப்ரே எப்ஸ்டீனுடன் பில்கேட்ஸ் நட்பு வைத்ததுதான் தனது விவாகரத்துக்கு காரணம் என்றும் மெலிண்டா கூறியிருக்கிறார். பில்கேட்ஸ் அவருடன் நட்பாக இருந்ததுடன் அடிக்கடி அவரை சிறையில் சென்று சந்தித்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். தன்னை விவாகரத்து செய்யுமாறு கூறியது அவர்தான் என்றும் அவர்கள் சொல்லிய கருத்தை செய்யும் பில்கேட்சின் தகவல் தொடர்பு அதிகாரி மறுத்திருக்கிறார்.

சமூக சேவைக்காக மட்டுமே அவரை பில்கேட்ஸ் சந்தித்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.