‘அதிமுக ஆதரவுடன்’… நீட் தேர்வுக்கு எதிரான மசோதா நிறைவேற்றம்!

 

‘அதிமுக ஆதரவுடன்’… நீட் தேர்வுக்கு எதிரான மசோதா நிறைவேற்றம்!

தமிழக மாணவர்களின் உயிரை காவு வாங்கிய நீட் தேர்வுக்கு எதிரான மசோதா எதிர்க்கட்சியின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரும் மசோதாவை முதல்வர் மு.க ஸ்டாலின் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அச்சமயம் நீட் தேர்வு காரணமாக மாணவர் தனுஷ் தற்கொலை கொண்டது பற்றி திமுக மற்றும் அதிமுகவினர் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது. அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

‘அதிமுக ஆதரவுடன்’… நீட் தேர்வுக்கு எதிரான மசோதா நிறைவேற்றம்!

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுக தான் காரணம். நீட் தேர்வை பற்றிய முறையான தகவலை கொடுக்காததால் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். எனினும், அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு மசோதாவுக்கு முழு ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு எதிரான இந்த மசோதாவுக்கு அதிமுக வெளிப்படையாக ஆதரவு அளித்தும் அதன் கூட்டணி கட்சியான பாஜக ஆதரவு அளிக்கவில்லை. பாஜக எம்எல்ஏக்கள் 4 பேரும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு நடத்தி நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.