“ஆன்லைனில் பைக் ஆட்டைய போட்டார் ” டெஸ்ட் டிரைவ் பண்றேன்னு பைக்கோடு பறந்து போனார் -திருட்டு பைக்கை வைத்து ஒரு ஷோ ரூமே நடத்தினார் .

“ஆன்லைனில் பைக் ஆட்டைய போட்டார் ” டெஸ்ட் டிரைவ் பண்றேன்னு பைக்கோடு பறந்து போனார் -திருட்டு பைக்கை வைத்து ஒரு ஷோ ரூமே நடத்தினார் .

‘கான் இன் 60 விநாடிகள்’என்ற ஹாலிவுட் படம் பார்த்து, அதே ஸ்டைலில் டெஸ்ட் டிரைவ் பார்ப்பதாக கூறி ஆன்லைனில் விற்பனைக்கு வரும் பைக்குகளை திருடி விற்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

“ஆன்லைனில் பைக் ஆட்டைய போட்டார் ” டெஸ்ட் டிரைவ் பண்றேன்னு பைக்கோடு பறந்து போனார் -திருட்டு பைக்கை வைத்து ஒரு ஷோ ரூமே நடத்தினார் .
புது தில்லியில் உள்ள நாங்லோய் நகரில் வசிக்கும் 31 வயது யசீன் என்ற வாலிபர் ஆன்லைனில் வரும் பழைய பைக் விற்கும் விளம்பரத்தை பார்த்து அந்த விளம்பரம் கொடுத்தவரை தொடர்பு கொள்வார் .பிறகு அந்த நபரிடம் நேரே சென்று அவரின் பைக்கை வாங்குவது போல நடித்து, அவரின் பைக்கை எடுத்துக்கொண்டு டெஸ்ட் ட்ரைவ் செய்து விட்டு வருகிறேன் என்று போவார் .அதற்கு பிறகு அந்த பைக்கோடு அவர் மாயமாக மறைந்து போவார் ,இப்படியாக பல நூறு பைக்குகளை விற்று பல லட்சங்கள் சம்பாதித்துள்ளார் .
ஆனால் ஆகஸ்ட் 11ம் தேதி ராஜேந்திர தாபா என்பவர் ஆன்லைனில் கொடுத்த விளம்பரத்தை பார்த்து அவரிடமும் இதே ஸ்டைலில் தன்னுடைய கைவரிசையை காமித்து பைக்கோடு பறந்து போனார் .இதனால் அந்த நபர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் யாஸீனை பிடித்த போலிஸார் அவரின் வீட்டிலிருந்து ஆறு பைக்குகள் ,மற்றும் பல நூறு செல்போன்களை கைப்பற்றியுள்ளார்கள் .அவர் இதே ஸ்டைலில் ஆன்லைனில் வரும் விளம்பரம் பார்த்து செல்போனையும் திருடியுள்ளார் .இவருக்கு இந்த யோசனை ஒரு ஹிந்தி டப்பிங் படம் பார்த்து தோன்றியதாம் .பிறகு போலீசார் யாஸீனை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்

“ஆன்லைனில் பைக் ஆட்டைய போட்டார் ” டெஸ்ட் டிரைவ் பண்றேன்னு பைக்கோடு பறந்து போனார் -திருட்டு பைக்கை வைத்து ஒரு ஷோ ரூமே நடத்தினார் .