darbar
  • January
    25
    Saturday

Main Area

Main



சாலையில் சீறிச்சென்ற பைக் ! போலீசுக்கே டாட்டா காட்டியவருக்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம் !

மாதிரி படம்
மாதிரி படம்

இந்தியாவில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில், பல இடங்களில் போலீசார் வாகனத்தை நிறுத்த முயலும்போது, வாகன ஓட்டிகள் நிற்காமல் கேலி செய்துவிட்டு செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்நிலையில் சண்டிகரில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது 3 பேர் யமஹா ஆர்எக்ஸ் 2 பைக்கில் வந்துள்ளனர். அவர்களை நிறுத்த முயன்றபோது, வண்டியை நிறுத்தாமல் வாகன ஓட்டிகள் கிண்டல் செய்துவிட்டு சென்றுள்ளனர்.
பின்னர் அந்த வாகனத்தின் பதிவெண்ணை வைத்து முகவரியை தேடி சென்ற போலீசார் விக்ராந்த் என்பவருக்கு 7 குற்றங்களுக்காக 14,500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

police

1) ஒரே மோட்டார் பைக்கில் 3 பேர் சென்றது, 2) ஹெல்மெட் இல்லாமல் சென்றது, 3) சிக்னலை மதிக்காமல் சென்றது, 4) சாலையில் வலதுபுறத்தில் வாகனதை ஓட்டியது, 5) சைக்கிள் செல்வதற்கென ஒதுக்கப்பட்ட பாதையில் பைக்கை ஓட்டியது, உள்பட 7 குற்றங்களுக்காக அபராதம் விதித்தனர். ஆனால் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு மோட்டார் வாகன சட்டத்தில் இடமில்லையாம். இதுமட்டுமின்றி வீட்டிற்கே சென்று அபராத ரசீதை போலீசார் வழங்கியபோது, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை காண்பிக்காமல் இருந்ததால், அவருக்கு கூடுதலாக 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது

police2


இதே போல ஹரியானாவின் கோஹனா பகுதியில் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர் பொருத்தப்பட்ட ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில், ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞரை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால் தப்பித்து ஓடினார். உடனடியாக அருகில் உள்ள சோதனை சாவடிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அந்த இளைஞர் பிடிக்கப்பட்டார். அவர் வாகனம் சம்பந்தமாக எந்த ஆவணமும் தரவில்லை. பைக்கின் பின் பக்க நம்பர் பிளேட் விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை உள்ளிட்ட குற்றங்களுக்காக 32,500 ரூபாய்  அபராதம் விதிக்கப்பட்டது.  ஆர்சி புக், டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாமல் இருந்தது, ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர் பயன்படுத்தியது, நம்பர் பிளேட் விதிகளை மீறியது ஆகிய காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டது.

2018 TopTamilNews. All rights reserved.