பீகார் சட்டப்பேரவை தேர்தல்… மகா கூட்டணி ரெடி.. 144 தொகுதிகளில் லாலு கட்சி… காங்கிரஸ் 70 இடங்களில் போட்டி

பீகார் சட்டப்பேரவை தேர்தல்… மகா கூட்டணி ரெடி.. 144 தொகுதிகளில் லாலு கட்சி… காங்கிரஸ் 70 இடங்களில் போட்டி

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்தது. ராஷ்டிரிய ஜனதா தளம் 144 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 28ம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதி என மொத்தம் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பீகாரில் இந்த சட்டப்பேரவை மும்முனை போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி மற்றும் பகுஜன் சமாஜ், சோஷலிச ஜனதாந்த்ரிக் மற்றும் ராஷ்ட்ரீய லோக் சமதா ஆகிய கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணி என மொத்தம் 3 கூட்டணிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன.

பீகார் சட்டப்பேரவை தேர்தல்… மகா கூட்டணி ரெடி.. 144 தொகுதிகளில் லாலு கட்சி… காங்கிரஸ் 70 இடங்களில் போட்டி
தேஜஸ்வி யாதவ்

பீகார் சட்டப்பேரவை தேர்தலை முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி சந்திக்கும் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்தார். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இன்னும் முடியவில்லை. ஆனால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்து விட்டது. மகா கூட்டணி கட்சிகளுக்கு இடையே நேற்று தொகுதி பங்கீடு முடிவடைந்தது.

பீகார் சட்டப்பேரவை தேர்தல்… மகா கூட்டணி ரெடி.. 144 தொகுதிகளில் லாலு கட்சி… காங்கிரஸ் 70 இடங்களில் போட்டி
காங்கிரஸ்

மகா கூட்டணியின் தொகுதி பங்கீடு ஒப்பந்தப்படி, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் மொத்தம் 144 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் 6 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 தொகுதிகளிலும் ஒதுக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ.(எம்.எல்.) 19 தொகுதியிலும் தேர்தலை சந்திக்கிறது.