மக்கள் அச்சம்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒடிசா, பீகார் முதல்வர்கள்!

 

மக்கள் அச்சம்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒடிசா, பீகார் முதல்வர்கள்!

நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், அரசியல் கட்சித் தலைவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முந்தக் கூடாது என்று அறிவுறுத்தியிருந்தார். உலக நாடுகள் முழுவதும் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அந்தந்த நாட்டின் உயர் தலைவர்கள் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளும்போது பிரதமரின் இப்பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பிரதமர் மோடிக்கும் அழுத்தம் அதிகரித்தது.

மக்கள் அச்சம்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒடிசா, பீகார் முதல்வர்கள்!
மக்கள் அச்சம்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒடிசா, பீகார் முதல்வர்கள்!

இருப்பினும் அவர் இரண்டாம் கட்டத்தில் 60 வயது முதியவர்களுடன் முதியவராக மோடி தடுப்பூசி போட்டுக்கொள்வார் என்று கூறப்பட்டது. சொன்னது போலவே இன்று தொடங்கிட இரண்டாம் கட்டத்தில் பிரதமர் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் தடுப்பூசி போட்டுவருகின்றனர். அந்த வகையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்.

ஊசி போட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார்,
“பீகாரில் கொரோனா தடுப்பூசி முற்றிலும் இலவசம். தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி போடும் வகையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது” என்றார்.


நவீன் பட்நாயக் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை உங்களிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கடினமான நேரத்தில் தடுப்பூசி கண்டுபிடித்த நமது ஆராய்ச்சியாளர்களுக்கும் அதைச் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் சுகாதாரத் துறையினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டு ஒடிசாவை கொரோனா இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.