ஆர்ப்பாட்டம், சாலை மறியல்களில் ஈடுபட்டால் அரசு வேலை, ஒப்பந்தங்கள் கிடைக்காது.. காவல் துறை எச்சரிக்கை

ஆர்ப்பாட்டம், சாலை மறியல்களில் ஈடுபட்டால் அரசு வேலை, ஒப்பந்தங்கள் கிடைக்காது.. காவல் துறை எச்சரிக்கை

பீகாரில், ஆர்ப்பாட்டம் அல்லது சாலை மறியில்களில் ஈடுபட்டவர்களுக்கு அரசு வேலை மற்றும் எந்தவொரு அரசு ஒப்பந்தங்களும் கிடைக்காது என்ற சுற்றறிக்கையை அம்மாநில காவல் துறை வெளியிட்டு பொதுமக்களை எச்சரி்க்கை செய்துள்ளது.

பீகாரில் அம்மாநில டி.ஜி.பி. சிங்லால் உத்தரவின்பேரில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசுக்கு சொந்தமான மது கடைகள், அரசு வேலை, துப்பாக்கி வைத்திருக்க உரிமம் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க காவல் துறை சரிசார்ப்பு அவசியம். எந்தவொரு சட்டம் ஒழுங்கு நிலைமை, ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள் போன்ற எந்தவொரு குற்றச் செயலிலும் ஒரு நபர் ஈடுபட்டு இருந்தால், இதற்காக அந்த நபர் மீது போலீசார் குற்றம் சாட்டி இருந்தால், அதனை காவல்துறையினர் தனிநபர் நடத்தை எழுத்து சரிபார்ப்பு அறிக்கையில் குறிப்பாகவும், திட்டவட்டமாகவும் குறிப்பிட வேண்டும்.

ஆர்ப்பாட்டம், சாலை மறியல்களில் ஈடுபட்டால் அரசு வேலை, ஒப்பந்தங்கள் கிடைக்காது.. காவல் துறை எச்சரிக்கை
தேஜஸ்வி யாதவ்

அத்தகைய நபர்கள் (ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுப்பட்டவர்கள்) அரசாங்க வேலைகள் அல்லது அரசுக்கு சொந்தமான மதுபான விற்பனை நிலையங்களை பெற முடியாது. ஆகையால் அவர்கள் கடுமையான விளைவுகளுக்கு தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை பெரும் சர்ச்சை மற்றும் கோபத்தை மக்கள் மத்தியில் ஈடுப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம், சாலை மறியல்களில் ஈடுபட்டால் அரசு வேலை, ஒப்பந்தங்கள் கிடைக்காது.. காவல் துறை எச்சரிக்கை
நிதிஷ் குமார்

இது தொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் டிவிட்டரில் காவல்துறையின் சுற்றறிக்கையை பதிவேற்றம் செய்ததுடன், முசோலின மற்றும் ஹிட்லருக்கு கடுமையான போட்டியை நிதிஷ் குமார் தருவதாக பதிவு செய்து இருந்தார். அதாவது நிதிஷ் குமார் சர்வாதிகாரியாக செயல்படுகிறார் என்று தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டினார்.