“மோடி தான் 15 லட்சத்தில் முதல் தவணையாக 5 லட்சம் அனுப்பியிருக்கிறார்” – அடம்பிடித்த நபர் கைது!

“மோடி தான் 15 லட்சத்தில் முதல் தவணையாக 5 லட்சம் அனுப்பியிருக்கிறார்” – அடம்பிடித்த நபர் கைது!

2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய பிரதமர் மோடி, பாஜக ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணம் அனைத்தையும் மீட்டு இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாயை செலுத்துவ்வதாக வாக்குறுதி அளித்தார். மத்திய அரசு கொடுத்த மற்ற வாக்குறுதிகளைப் போல் அல்லாமல் மக்களிடம் இது பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தச் சமயம் பாஜக ஆட்சியில் அமர இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.

“மோடி தான் 15 லட்சத்தில் முதல் தவணையாக 5 லட்சம் அனுப்பியிருக்கிறார்” – அடம்பிடித்த நபர் கைது!

ஆனால் அந்த வாக்குறுதியை பிரதமர் மோடி காற்றில் பறக்கவிட்டார் என்றே சொல்ல வேண்டும். 15 லட்சம் ரூபாய் போட வேண்டும் அட்லீஸ்ட் கருப்பு பணத்தையாவது மீட்டாரா என்றால் அதுவும் கேள்விக்குறி தான். இந்த விவகாரத்தைக் கையிலெடுத்த எதிர்க்கட்சிகள் அவ்வப்போது மத்திய அரசை விமர்சித்து வந்தன. ஆனாலும் இதுதொடர்பாக பாஜக எந்தவொரு முறையான விளக்கத்தையும் கொடுக்கவில்லை. அந்த ஆட்சி முடிந்து அடுத்த ஆட்சியிலும் பாஜக அமர்ந்துவிட்டு இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

“மோடி தான் 15 லட்சத்தில் முதல் தவணையாக 5 லட்சம் அனுப்பியிருக்கிறார்” – அடம்பிடித்த நபர் கைது!

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், “நாங்கள் ஆட்சிக்கு வர மாட்டோம் என்று நினைத்தோம். அப்படி நினைத்துதான் நாங்கள் நிறைய வாக்குறுதிகளை கொடுத்தோம். ஆனால் கடைசியில் ஆட்சிக்கு வந்துவிட்டோம். இப்போது மக்கள் எங்களிடம் அந்த வாக்குறுதி குறித்து கேட்கிறார்கள். நாங்கள் எதுவும் சொல்லாமல் சிரித்துவிட்டு கடந்து விடுகிறோம். வேறு வழியில்லை” என்று பேசி சர்ச்சையைக் கிளப்பினார். இன்னும் சில முக்கியப் புள்ளிகள் அந்த 15 லட்சம் திட்டங்களாக வந்து சேரும் என்றார்கள். ஆக மொத்தத்தில் பாஜக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றப் போவதில்லை என்று புலப்பட்டு விட்டது.

“மோடி தான் 15 லட்சத்தில் முதல் தவணையாக 5 லட்சம் அனுப்பியிருக்கிறார்” – அடம்பிடித்த நபர் கைது!

ஆனாலும் இதனை ஏற்க மறுக்கும் ஒருசில மக்கள் மோடி தங்களது வங்கி கணக்கில் எப்படியும் 15 லட்சம் போட்டுவிடுவார் என அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர். அந்த முரட்டுத்தன நம்பிக்கையால் பீகாரில் நபர் ஒருவர் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். ககரியா மாவட்டத்திலுள்ள பக்தியார்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் தாஸ். இவர் வங்கி கணக்கில் தவறுதலாக 5.5 லட்சம் ரூபாய் வந்திருக்கிறது. இதனை பிரதமர் மோடி தான் முதல் தவணையாக செலுத்தியுள்ளார் என சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துள்ளார். ஆனால் வங்கியோ இல்லை இல்லை தவறுதலாக உங்கள் கணக்கிற்கு வந்துவிட்டது.

“மோடி தான் 15 லட்சத்தில் முதல் தவணையாக 5 லட்சம் அனுப்பியிருக்கிறார்” – அடம்பிடித்த நபர் கைது!

திருப்பிச் செலுத்திவிடுங்கள் என பலமுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வங்கியின் நோட்டீஸை ஏற்கமறுத்த ரஞ்சித் தாஸ், தான் பிரதமர் மோடி கொடுத்த பணத்தைத் திருப்பி கொடுப்பதாய் இல்லை என அடம்பிடித்துள்ளார். மேலும் அந்தப் பணத்தையெல்லாம் தான் செலவளித்து விட்டதாகவும் கூறி வங்கிக்கு ஷாக் கொடுத்துள்ளார். இதற்குப் பின் வங்கி மேலாளர் மன்சி காவல் நிலையத்தில் ரஞ்சித் தாஸ் மீது புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் ரஞ்சித் தாஸை இன்று காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக ரஞ்சித்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.