காங்கிரசுக்கு உதவ யாரும் இல்லை…..லோக் ஜனசக்தி கட்சி கிண்டல்

 

காங்கிரசுக்கு உதவ யாரும் இல்லை…..லோக் ஜனசக்தி கட்சி கிண்டல்

இந்த ஆண்டு இறுதியில் பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆன்லைனில் பீகார் காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தினார். அப்போது, ராம் விலாஸ் பஸ்வான் தன்னிடம் பேசியதாகவும், ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக கட்சி தலைமையிடம் பேச நேரம் கிடைக்கவில்லை என ராகுல் காந்தியிடம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அகிலேஷ் பிரசாத் சிங் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

காங்கிரசுக்கு உதவ யாரும் இல்லை…..லோக் ஜனசக்தி கட்சி கிண்டல்

அதாவது பா.ஜ.க. கூட்டணயில் இருக்கும் லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பீகார் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க விரும்புவதாக தன்னிடம் கூறியதாக பிரசாத் சிங் தெரிவித்ததாக தகவல் பரவியது. இதற்கு லோக் ஜனசக்தி கட்சியின் துணை தலைவர் ஹூலா பாண்டே கிண்டலாக பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

காங்கிரசுக்கு உதவ யாரும் இல்லை…..லோக் ஜனசக்தி கட்சி கிண்டல்

நாம் இருக்கும் பக்கத்தில்தான் (கூட்டணி) அரசாங்கம் அமைகிறது என்பதை நாம் எப்போதும் பார்த்து வருகிறோம். தற்போது காங்கிரஸ் கட்சிக்கு உதவ யாரும் இல்லை. ஆகையால், ராம் விலாஸ் பஸ்வான் ஜி நம்முடன் வந்தால் நாம் ஆட்சி அமைத்து விடலாம் என ஒருவேளை அவர்கள் (காங்கிரஸ்) நினைத்துக் கொண்டிருக்கலாம். அது வெறும் பகல்கனவு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.