45 நாட்களில் கொரோனா பாதிப்பு 10 மடங்கு அதிகரிப்பு… லாக்டவுனை செப்டம்பர் 6ம் தேதி வரை நீட்டித்த பீகார் அரசு…

45 நாட்களில் கொரோனா பாதிப்பு 10 மடங்கு அதிகரிப்பு… லாக்டவுனை செப்டம்பர் 6ம் தேதி வரை நீட்டித்த பீகார் அரசு…

பீகாரில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அம்மாநில அரசு செப்டம்பர் 6ம் தேதி வரை நீட்டித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு லாக்டவுனை நீட்டித்துள்ளது. அன்லாக் 3க்கான விதிமுறைகளுடன் லாக்டவுனை பீகார் அரசு விதித்துள்ளது.

45 நாட்களில் கொரோனா பாதிப்பு 10 மடங்கு அதிகரிப்பு… லாக்டவுனை செப்டம்பர் 6ம் தேதி வரை நீட்டித்த பீகார் அரசு…

பீகாரில் நேற்று காலை நிலவரப்படி மொத்தம் 1.03 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடந்த 45 தினங்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துதல் மண்டலங்கள் மற்றும் தாக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் லாக்டவுன் விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற பீகார் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

45 நாட்களில் கொரோனா பாதிப்பு 10 மடங்கு அதிகரிப்பு… லாக்டவுனை செப்டம்பர் 6ம் தேதி வரை நீட்டித்த பீகார் அரசு…

லாக்டவுன் காலத்தில் அனைத்து மதவழிபாட்டு தலங்களும் அடைக்கப்பட்டு இருக்கும், மத கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது. சமூக மற்றும் அரசியல் கூட்டங்களும் நடத்த கூடாது. உடற்பயிற்சி கூடங்கள், பார்க்குகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். பஸ்கள் இயங்காது. சரக்கு வாகனங்கள் எந்தவித தடையும் இல்லாமல் இயங்க அனுமதிப்படும். அத்தியாவசிய மற்றும் இதர சேவைகள் உள்ளிட்ட முன்பு இயங்க அனுமதிக்கப்பட்டவை தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.