பீகாரில் 19 எம்.எல்.ஏ.க்களில் 11 பேர் கட்சிய விட்டு விலக போறாங்க… காங்கிரஸ் தலைமை எச்சரித்த மூத்த தலைவர்

பீகாரில் 19 எம்.எல்.ஏ.க்களில் 11 பேர் கட்சிய விட்டு விலக போறாங்க… காங்கிரஸ் தலைமை எச்சரித்த மூத்த தலைவர்

பீகாரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 19 பேரில் 11 பேர் கட்சியிலிருந்து வெளியேறலாம் என்று கட்சியின் தலைமைக்கு அந்த கட்சியின் மூத்த தலைவர் பாரத் சிங் எச்சிரிக்கை செய்துள்ளார்

பீகாரில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமே 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 11 பேர் அந்த கட்சியை விட்டு விலக போவதாக அந்த கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாரத் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

பீகாரில் 19 எம்.எல்.ஏ.க்களில் 11 பேர் கட்சிய விட்டு விலக போறாங்க… காங்கிரஸ் தலைமை எச்சரித்த மூத்த தலைவர்
காங்கிரஸ்

19 எம்.எல்.ஏ.க்களில் 11 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் பணம் கொடுத்து தேர்தலில் போட்டியிட டிக்கெட் வாங்கி எம்.எல்.ஏ. ஆனவர்கள். 11 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசை விட்டு விலக விரும்புகிறார்கள். பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் மதன் மோகன் ஜா, மாநிலங்களவை உறுப்பினர் அகிலேஷ் பிரசாத் சிங் மற்றும் காங்கிரசின் மூத்த தலைவர் சதானந்த் சிங்கும் கட்சியிலிருந்து வெளியேறலாம்.

பீகாரில் 19 எம்.எல்.ஏ.க்களில் 11 பேர் கட்சிய விட்டு விலக போறாங்க… காங்கிரஸ் தலைமை எச்சரித்த மூத்த தலைவர்
அகிலேஷ் பிரசாத் சிங்

ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான காங்கிரஸ் கூட்டணிக்கு நான் எப்போதும் எதிராகவே இருந்தேன். இந்த கூட்டணி கட்சிக்கு சுய அழிவை ஏற்படுத்தும். பீகார் கட்சியின் நிலைமை குறித்து கட்சியின் தலைமைக்கு எப்போதும் தவறான தகவல் கொடுக்கப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் மதன் மோகன் ஜா, மாநிலங்களவை உறுப்பினர் அகிலேஷ் பிரசாத் சிங் மற்றும் காங்கிரசின் மூத்த தலைவர் சதானந்த் சிங் ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.