பீகாரில் இரவு நேர ஊரடங்கு… சுகாதார பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளம் போனஸ்.. நிதிஷ் குமார் அறிவிப்பு

பீகாரில் இரவு நேர ஊரடங்கு… சுகாதார பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளம் போனஸ்.. நிதிஷ் குமார் அறிவிப்பு

பீகாரில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, மாநில முழுவதும் இரவு ஊரடங்கு, புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2வது அலை தீவிரமாக உள்ளது. பெரும்பாலான மாநிலங்கள் கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கின்றன. பீகாரில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே பீகாரில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுமைக்கும் இரவு ஊரடங்கு, சில புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

பீகாரில் இரவு நேர ஊரடங்கு… சுகாதார பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளம் போனஸ்.. நிதிஷ் குமார் அறிவிப்பு
இரவு ஊரடங்கு (கோப்புப்படம்)

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்புகளில் முக்கியமானவை இதோ: மாநிலம் முழுவதும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும். மே 15ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும். மண்டிகள், காய்கறி, பழங்கள், முட்டை, இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் இதர வர்த்தக நிறுவனங்கள் மாலை 6 மணிக்குள் மூட வேண்டும்.

பீகாரில் இரவு நேர ஊரடங்கு… சுகாதார பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளம் போனஸ்.. நிதிஷ் குமார் அறிவிப்பு
சுகாதார பணியாளர்கள்

ரெஸ்ட்ராண்ட், தபாக்கள் இரவு 9 மணி வரை செயல்படலாம் அதுவும் பார்சல் விற்பனைக்கு மட்டுமே அனுமதி. அனைத்து மத வழிப்பாட்டு தலங்களும் மே 15ம் தேதி வரை மூடப்படும். இறுதி சடங்கில் 25 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம். திருமணத்தில் நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் பங்கேற்க தடை. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் ஒரு மாத சம்பளம் போனஸாக வழங்க முடிவு செய்துள்ளது.