இதுதான் என்னுடைய கடைசி தேர்தல் -. நிதிஷ் குமார்… நிதிஷ் சோர்வடைந்து விட்டார்…. எதிர்க்கட்சிகள்

 

இதுதான் என்னுடைய கடைசி தேர்தல் -. நிதிஷ் குமார்…  நிதிஷ் சோர்வடைந்து விட்டார்…. எதிர்க்கட்சிகள்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் இதுதான் என்னுடைய கடைசி தேர்தல் என்று அறிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் நிதிஷ் குமார் சோர்வடைந்து விட்டார் என்று கருத்து தெரிவித்துள்ளன.

பீகாரில் 243 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மொத்தம் 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நாளை 3வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் நேற்று புரனேவில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் பெரிய அறிவிப்பை வெளியிட்டார். நிதிஷ் குமார் பேசுகையில் கூறியதாவது: இன்று கடைசி நாள் (கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரத்துக்கு). நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதுதான் என்னுடைய கடைசி தேர்தல். ஆகையால் வாக்காளர்கள் ஐக்கிய ஜனதா தளத்துக்கு வாக்களியுங்கள். ஐக்கிய ஜனதா தள கட்சியின் வெற்றியை உறுதி செய்யுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுதான் என்னுடைய கடைசி தேர்தல் -. நிதிஷ் குமார்…  நிதிஷ் சோர்வடைந்து விட்டார்…. எதிர்க்கட்சிகள்
நிதிஷ் குமார்

இதுதான் தன்னுடைய கடைசி தேர்தல் என்று நிதிஷ் குமார் அறிவித்தது குறித்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், நிதிஷ் குமார் தான் சோர்வு அடைந்துவிட்டோம் என்பதை உணர்ந்திருக்கிறார். அவரால் பீகாரை கையாள முடியாது என்பதை உணர்ந்து விட்டார். இன்று கள யதார்த்தத்தை புரிந்து கொண்டு ஒய்வு பெற முடிவு செய்துள்ளார் என தெரிவித்தார்.

இதுதான் என்னுடைய கடைசி தேர்தல் -. நிதிஷ் குமார்…  நிதிஷ் சோர்வடைந்து விட்டார்…. எதிர்க்கட்சிகள்
சிராக் பஸ்வான்

லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் கூறுகையில், அவரது கடைசி கூட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட அவருக்கு யார் ஆலோசனை கொடுத்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. தலைவர் போர்க்களத்திலிருந்து ஓடும்போது, போட்டியாளர்கள் நிச்சயமாக மனச்சோர்வடைவார்கள் என்று தெரிவித்தார்.