பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு…. பா.ஜ.க.வுக்கு 121, நிதிஷ் குமார் கட்சிக்கு 122 தொகுதிகள்….

பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு…. பா.ஜ.க.வுக்கு 121, நிதிஷ் குமார் கட்சிக்கு 122 தொகுதிகள்….

தேசிய ஜனநாயக கூட்டணியில் பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு முடிவடைந்தது. பா.ஜ.க.வுக்கு 121 தொகுதிகளும், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 122 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 28ம் தேதி தொடங்கி மொத்தம் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான பா.ஜ.க.வும், ஐக்கிய ஜனதா தளமும் தங்களுக்கு இடையிலான தொகுதி பங்கீட்டை நேற்று முடிவு செய்தன. அதன்படி, மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு 121 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளத்துக்கு 122 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு…. பா.ஜ.க.வுக்கு 121, நிதிஷ் குமார் கட்சிக்கு 122 தொகுதிகள்….
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

பீகார் தலைநகர் பாட்னாவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை நிதிஷ் குமார் வெளியிட்டார். அப்போது நிதிஷ் குமார் பேசுகையில், மொத்தமுள்ள 243 இடங்களில் பா.ஜ.க.வுக்கு 121 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 122 தொகுதிகள் கிடைத்துள்ளது.

பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு…. பா.ஜ.க.வுக்கு 121, நிதிஷ் குமார் கட்சிக்கு 122 தொகுதிகள்….
ஜிதன் ராம் மஞ்சி

ஐக்கிய ஜனதா தளம் தனது ஒதுக்கீட்டில் 7 இடங்களை ஜிதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சிக்கு கொடுக்கும். பா.ஜ.க.வுக்கும், விகாஷீல் இன்சான் கட்சிக்கும் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளது. பா.ஜ.க. தனக்கான கோட்டாவிலிருந்து விகாஷீல் இன்சான் கட்சிக்கு இடங்களை கொடுக்கும். யார் என்ன ஊகிக்கிறார்களோ அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் ஒன்றாக வேலை செய்கிறோம். அவ்வாறு செய்வோம் என தெரிவித்தார்.